அனுமதி இல்லாமல் தெய்வமகள் சீரியலை ரீமேக் செய்ததற்கு நஷ்ட ஈடு கேட்டு விகடன் நிறுவனம் நோட்டீஸ் அனுப்பி இருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. தொலைக்காட்சி என்ற ஒன்று உருவானதிலிருந்து மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களாக சீரியல்கள் விளங்குகிறது. அதிலும் சன் டிவி சீரியல்கள் தான் சின்னத்திரையில் அதிக ஆதிக்கம் செலுத்தி வருகிறது. டிஆர்பி ரேட்டிங்கில் தொடர்ந்து முதலிடத்தை சன் டிவி சீரியல்கள் தான் பிடித்து வருகிறது. இதனால் புதுப்புது வித்தியாசமான கதைக்களத்துடன் தொடர்புகளை சன் டிவி ஒளிபரப்பி வருகிறார்கள்.
மேலும், மக்களின் பேவரட் சேனலான விஜய் டிவி கூட டிஆர்பியில் இரண்டாம் இடத்தை பிடித்திருக்கிறது.
அதுமட்டும் இல்லாமல் சன் டிவியில் ஒளிபரப்பான பல தொடர்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. அந்தவகையில் இல்லத்தரசிகளின் ஃபேவரட் சீரியல்களில் ஒன்றாக இருந்தது தெய்வமகள். இந்த தொடர் 2013 ஆம் ஆண்டு தொடங்கி 2018ஆம் ஆண்டு வரை ஒளிபரப்பப்பட்டது. இந்த தொடரை எஸ் குமரன் என்பவர் இயக்கியிருந்தார்.
தெய்வமகள் சீரியல் பற்றிய தகவல்:
அதோடு இந்தத் தொடர் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றதால் மீண்டும் டிவியில் ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. மேலும், இந்த தொடரில் சத்யாவாக நடித்த வாணி போஜன் தற்போது பிரபலமான நடிகையாக திகழ்ந்து கொண்டு இருக்கிறார். இந்த சீரியலில் நடித்த பல நடிகர்கள் மக்கள் மத்தியில் பிரபலமாகி சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரையில் கலக்கி கொண்டு இருக்கிறார்கள். அந்த அளவிற்கு இந்த சீரியலுக்கு என்றே ஒரு தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது.
தெய்வமகள் சீரியல் ரீமேக் ஆன மொழிகள்:
அதுமட்டுமில்லாமல் இந்த தொடரை தெலுங்கு, மலையாளம் என பிற மொழிகளிலும் மொழிமாற்றம் செய்யப்பட்டு ஒளிபரப்பி வருகிறார்கள். இந்நிலையில் இந்த சீரியலை பெங்காலியில் ரீமேக் செய்ததற்காக நஷ்ட ஈடு கேட்டு நோட்டீஸ் அனுப்பி இருக்கும் தகவல் சோசியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது. அது என்னவென்றால், சன் டிவியில் ஒளிபரப்பான தெய்வமகள் சீரியல் பல மொழிகளில் ஒளிபரப்பாகி வருகிறது.
பெங்காலி மொழியில் ரீமேக் :
அதோடு இந்த சீரியல் பிற மொழியிலும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அதனால் இந்த சீரியலை பெங்காலியில் ரிமேக் செய்து ஒளிபரப்பு செய்து இருக்கிறார்கள். ஆனால், தெய்வமகள் சீரியல் கதையை அனுமதி இல்லாமல் பெங்காலி மொழியில் ரீமேக் செய்திருக்கிறார்கள். இதனால் நூறு கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு விகடன் நிறுவனம் நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது. அந்த நோட்டீஸில் கூறி இருப்பது,
விகடன் நிறுவனம் நோட்டீஸில் கூறி இருப்பது:
தெய்வமகள் சீரியல் கதையை அப்படியே வைத்து கதாபாத்திரங்கள் பெயரை மட்டும் மாற்றி Debi என்கிற பெயரில் ரீமேக் செய்து சன் பங்ளா தொலைக்காட்சியில் ஒளிபரப்பி இருக்கின்றனர். ஆகவே, 15 நாட்களுக்குள் இதற்கு விளக்கம் அளிக்க வேண்டும். இல்லை என்றால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் விகடன் நிறுவனம் சார்பில் அனுப்பப்பட்ட நோட்டீஸில் குறிப்பிடப்பட்டுள்ளது.