லாக்டவுன் பிரச்சனை கண்ணான கண்ணே சீரியலின் ஷூட்டிங்கை எங்கு நடத்தி இருக்காங்க பாருங்க.

0
2942
kannana Kanne
- Advertisement -

கொரோனா பிரச்சனை காரணமாக சினிமா மற்றும் சின்னத்திரை படப்பிடிப்புகள் எல்லாம் ரத்தாகி இருந்தது. இருப்பினும் இடையில் சினிமாவின் போஸ்ட ப்ரொடக்சன் பணிகள் மட்டும் அனுமதிப்பட்டிருந்த நிலையில் சின்னத்திரை தொடர்களை பல கட்டுப்பாடுகளுடன் 60 பேர் மட்டும் நடத்திக்கொள்ளலாம் என்று அனுமதி வழங்கப்பட்டு இருந்தது. இதனால் சின்னத்திரை ஷூட்டிங் அனைத்தும் துவங்கப்பட்டது.

-விளம்பரம்-
Kannana Kanne Serial yuva - Meera Love scenes Upcoming Scenes | Kannana  Kanne Serial sun tv - YouTube

சினிமா ஷூட்டிங் இல்லாததால் தற்போது ரிலீஸ் ஆக இருந்த படங்கள் அனைத்தும் OTTயில் வருகிறது. பின்னர் படப்பிடிப்புகளுக்கு கொஞ்சம் தளர்வுகள் கொடுக்கப்பட்டு இருந்த நிலையில் தற்போது மீண்டும் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருவதால் பல்வேறு படப்பிடிப்புகள் முடங்கி இருக்கிறது. அதே போல ஒரு சில படப்பிடிப்புகளை சென்னையிலேயே நடந்த திட்டமிட்டு இருந்தனர்.

இதையும் பாருங்க : பவித்ரா லட்சுமி புகைப்படத்தை வெச்சி செய்யும் மீம் கிரியேட்டர்கள் – காரணம் இந்த கேப்ஷன் தான்.

- Advertisement -

இருப்பினும் சீரியல் படப்பிடிப்புகள் தொடர்ந்து நடைபெற்று வந்த போதிலும் பல சீரியல்கள் இந்த லாக் டவுன் சமயத்தில் நிறுத்தப்பட்டது.அதே போல தான் விஜய் டிவியின் பல சீரியல்கள் நிறுத்தப்பட்டது. இந்த லாக் டவுன் சமயத்தில் விஜய் டிவியில் பல்வேறு சீரியல்களை இணைந்து சங்கமம் என்ற பெயரில் உருட்டி வந்தனர். சீரியல் எபிசோடுகளை ஈடு செய்ய அணைத்து சீரியல்களுக்கும் டைட்டில் பாடல்கள் எல்லாம் ஒளிபரப்பப்பட்டு ரன்னிங் டைமை முட்டு கொடுத்து வந்தனர்.

தற்போதும் எப்படியோ படப்பிடிப்புகளை நடத்தி வரும் சீரியல் குழுக்கள் எங்கேங்கோ ஷூடிங்கை நடத்தி வருகின்றனர். விஜய் டிவி சீரியல்கள் சில ரெசார்ட்டில் நடந்து வருகிறது. இப்படி ஒரு நிலையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கண்ணான கண்ணே சீரியலின் படப்பிடிப்பை சன் தொலைக்காட்சியின் வணக்கம் தமிழா செட்டில் நடத்தி இருக்கிறார்கள். இதனை பலரும் கேலி செய்து வருகின்றனர்.

-விளம்பரம்-
Advertisement