நானும் இப்படி இருந்திருக்கேன் – சன் டிவி சீரியல் நடிகையின் உருக்கமான பதிவு.

0
2380
bavithra
- Advertisement -

தற்போது இருக்கும் காலகட்டத்தில் சினிமா நடிகர்களை விட சீரியல் நடிகைகள் குறுகிய காலத்திலேயே ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்து விடுகிறார்கள். சினிமா நடிகர்களும் சரி சீரியல் நடிகர்களும் சரி நடிக்க வருவதற்கு முன்னர் அனைவருமே சொகுசான வாழ்க்கையை வாழ்ந்துவிட்டு வருவது இல்லை. எத்தனையோ பேர் நடிகர்களாக முன்னர் வறுமையான வாழ்க்கையை வாழ்ந்து இருக்கிறார்கள். அந்த வகையில் இந்த சீரியல் நடிகையும் ஒருவர் என்பதை இவரின் சமீபத்திய பதிவு காண்பிக்கிறது.

-விளம்பரம்-

அது வேறு யாரும் கிடையாது சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் நிலா சீரியல் நடிகை பவித்ரா தான். நடிகை பவித்ரா 1995 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 23 ஆம் தேதி சென்னையில் பிறந்தவர். தற்போது இவர் சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இவர் சீரியல் நடிகை மட்டுமல்லாமல் தொகுப்பாளினி, மாடல், விஜே என பன்முகங்கள் கொண்டவர்.

இதையும் பாருங்க : Sc எல்லாரும் கிரிமினல், சினிமாவில் இருக்கும் எல்லா Sc-யையும் வெளியில் அனுப்ப வேண்டும் – மீரா மிதுனின் திமிர் பேச்சு.

- Advertisement -

மேலும், இவர் 2017 ஆம் ஆண்டு மிஸ் சவுத் இந்தியா என்ற பட்டத்தையும் வென்று உள்ளார். அதற்கு பின் பிரபலங்கள் பல பேர் சொப்பன சுந்தரி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் நடிகை பவித்தராவும் கலந்து கொண்டார். ஒரு சில படங்களில் கூட நடித்துள்ள பவித்ரா, தற்போது தொகுப்பாளினியாகவும் நடிகையாகவும் திகழ்ந்து வருகிறார். சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி தன்னுடைய புகைப்படங்களை பதிவிடுவது வழக்கம்.

Nila 1 January, 1901 Sun Tv Serial - Tamil Sun

இப்படி ஒரு நிலையில் சமீபத்தில் இவர் மீன் ஒன்று இருக்கு ரியாக்ட் செய்துள்ளது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது. அந்த புகைப்படத்தில் செருப்பில் ஊக்கு குத்தப் பட்டு இருக்கிறது, உங்கள் வாழ்க்கையில் இப்படி நீங்கள் இருந்தது உண்டா என்ற அந்த கேள்விக்கு நடிகை பவித்ரா, நானும் இப்படி இருந்திருக்கிறேன் என்று கமெண்ட் செய்திருப்பது அவரது ரசிகர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது. தற்போது சீரியலில் இருந்து வரும் இவரா இப்படி ஒரு நிலையில் இருந்துள்ளார் என்பது கொஞ்சம் வியப்பான விஷயம்தான்

-விளம்பரம்-
Advertisement