நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் என்ட்ரி கொடுக்கும் சன் டிவி சீரியல் நடிகை – மாறனுக்கு ஜோடியா ?

0
1012
NINI
- Advertisement -

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் தொடர்களெல்லாம் மக்கள் மத்தியில் பேராதரவை பெற்று வருகிறது. அந்த வகையில் டிஆர்பியில் முன்னிலை வகிக்கும் தொடர்களில் ஒன்று நாம் இருவர் நமக்கு இருவர். இந்த சீரியல் இரண்டு பாகங்களாக ஒளிபரப்பாகி வருகிறது. நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலின் முதல் பாகம் 2018 ஆம் ஆண்டு ஒளிபரப்பப்பட்டது. இந்த தொடர் நன்றாக தான் சென்றது. பின் கொரோனா பரவல் அதிகமாக இருந்ததால் இந்த சீரியலில் நடித்த நடிகர்கள் பலர் விலகினார்கள். பின் அவர்களை தொடர்ந்து சீரியலில் நடித்த கதாநாயகிகள் ரக்‌ஷா, ரேஷ்மி இருவரும் விலகினார்கள். இதனால் இந்த சீரியலை முடித்து விட்டார்கள்.

-விளம்பரம்-
Nila Serial Actress Bavithra In Sun Life Soppana Sundari Show

இதனை தொடர்ந்து நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலின் இரண்டாம் பாகம் விஜய் டிவியில் ஒளிபரப்பட்டு வருகிறது. இதில் செந்தில்குமார் அவர்கள் மாயன், மாறன் என்ற இரு வேடத்தில் நடிக்கிறார். இந்த தொடர் 2020 ஆம் ஆண்டு ஒளிபரப்பப்பட்டது. இந்த தொடர் ஒளிபரப்பானதிலிருந்து இன்று வரை மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மேலும், இந்த தொடரில் முதலில் மகா கதாபாத்திரத்தில் ரக்ஷிதா நடித்து வந்தார்.

- Advertisement -

ரக்ஷிதா சீரியலில் இருந்து விலகிய காரணம்:

பின் அவர் இந்த தொடரில் இருந்து விலகிவிட்டார். இதுகுறித்து ரக்ஷிதா கூறியது, நான் சீரியலில் இல்லை என்பது உங்களில் பலருக்கு ஏமாற்றமாக இருக்கும் என்பதை ஏற்றுக் கொள்கிறேன். ஆனால், சில சூழ்நிலை காரணத்தினால் தான் என்னால் சீரியலில் நடிக்க முடியாமல் போனது. இந்தத் தொடரில் எனக்கு மதிப்பில்லை என்பதை உணர்ந்து தான் இந்தத் தொடரில் இனி நடிக்க வேண்டாம் என்று இந்த முடிவை எடுத்தேன் என்று பதிவிட்டு இருந்தார். இது ரசிகர்கள் பலருக்கும் ஏமாற்றமாக இருந்தது.

நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் விலகிய நடிகர்கள்:

இவரை தொடர்ந்து தற்போது மகா கதாபாத்திரத்தில் அரண்மனை கிளி சீரியலில் நடித்த நடிகை மோனிஷா நடித்து வருகிறார். பிறகு இந்த சீரியல் இருந்து கத்தி என்ற கதாபாத்திரத்தில் நடித்த ராஜு பிக் பாஸ் சென்றதால் சீரியலில் வெளியேறி இருந்தார். மீண்டும் இவர் சீரியலில் வருவாரா? இல்லையா? என்ற பல குழப்பத்திலும் ரசிகர்கள் இருக்கிறார்கள். இது ஒரு பக்கம் இருக்க, தற்போது சீரியலில் மாயன், மாறன் இருவருக்குமிடையே நடக்கும் மோதல் பரபரப்பாகவும் பல திருப்பங்களுடன் சென்று கொண்டிருக்கிறது.

-விளம்பரம்-

நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் புது என்ட்ரி:

இந்த நிலையில் தற்போது இந்த சீரியலில் புது என்றி ஒருவர் கொடுத்துள்ளதாக தகவல் சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அவர் வேற யாரும் இல்லைங்க, நடிகை பவித்ரா. பொதுவாகவே சீரியலில் நடிகர்கள் விலகுவதும் என்ட்ரி கொடுப்பதும் வழக்கமான ஒன்று தான். அதிலும் சமீப காலமாக சின்னத்திரை சீரியல் நடிகர்கள் பலர் விலகியும், பல புதுமுக நடிகர்கள் என்ட்ரி கொடுத்தும் வருகிறார்கள். அந்த வகையில் தற்போது நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் புது என்ட்ரி ஆக பவித்ரா நடிக்கிறார். இவர் இந்த சீரியல் மூலம் தான் விஜய் டிவி விஜய் டிவிக்கு அறிமுகமாகிறார்.

சீரியலில் நடிகை பவித்ரா என்ட்ரி:

இவர் ஏற்கனவே சன் டிவியில் தொகுப்பாளினியாக இருந்திருக்கிறார். அதுமட்டுமில்லாமல் சன் டிவி ஒளிபரப்பான நிலா என்ற சீரியலில் நடித்து இருந்தார். தற்போது இவர் நாம் இருவர் நமக்கு இருவர் 2 சீரியலில் நடிக்கிறார். அதுமட்டும் இல்லாமல் சீரியலில் ஏற்கனவே மாயன் கதாபாத்திரத்துக்கு மகா ஜோடியாக இருக்கிறார். மாறன் கதாபாத்திரத்திற்கு ஜோடி இல்லை. அவருக்கு ஜோடியாகத்தான் இவர் வந்திருப்பதாக கூறப்படுகிறது. வரும் காலங்களில் இவருடைய என்ட்ரிக்கு பிறகு சீரியல் எப்படி போகிறது? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Advertisement