கடந்த ஆண்டு இறுதியில் சீரியல் நடிகை ஜெயஸ்ரீக்கும் அவரது கணவர் நடிகர் ஈஸ்வருக்கும் இடையே நடந்த குடும்ப பிரச்சனை சமூக வலைத்தளங்களில் பயங்கர சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. நடிகை ஜெயஸ்ரீ அவர்கள் தன்னுடைய கணவர் ஈஸ்வர் தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வரும் மகாலட்சுமி என்பவருடன் கள்ளத் தொடர்பில் உள்ளார் என்று காவல் நிலையத்தில் புகார் அளித்து இருந்தார். இதனால் ஜெயஸ்ரீ கணவர் ஈஸ்வரை போலீசார் கைது செய்து விசாரித்து இருந்தது. பின்னர் ஈஸ்வர், மகாலட்சுமி, ஜெயஸ்ரீ ஆகிய மூவரும் மாத்தி மாத்தி ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டி பேட்டி அளித்து வந்து உள்ளார்கள்.
நடிகை ஜெயஸ்ரீக்கு ஏற்கனவே முதல் திருமணம் செய்து விவாகரத்து ஆன நிலையில் தனது 8 வயது பெண் குழந்தையுடன் தான் இவர் நடிகர் ஈஸ்வர் ரகுநாத்தை திருமணம் செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘தேவதையை கண்டேன் ‘ என்ற சீரியலில் ஈஸ்வரும், மகாலட்சுமியும் நடித்து இருந்தார்கள். இவர்களின் குடும்ப பிரச்சனையால் சீரியலையே நிறுத்தி விட்டார்கள். இது அனைவருக்கும் தெரிந்ததே. பின் தன் கணவனின் டார்சல் தங்கள் முடியாமல் நடிகை ஜெயஸ்ரீ தூக்க மாத்திரை விழுங்கி தற்கொலைக்கு முயன்று இருந்தார்.
இந்த நிலையில் இவருடைய நண்பர்களால் ஜெயஸ்ரீ மீட்கப்பட்டு ஆபத்தான கட்டத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்தார். இந்த சம்பவம் சின்னத்திரை நடிகர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இதற்கு தற்கொலைக்கு காரணம் ஈஸ்வரன் தன்னை மிரட்டினார் என்று பேட்டியில் கூறியிருந்தார். தற்போது நடிகை ஜெயஸ்ரீ அவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக குணமடைந்து வருகிறார் என்று நண்பர்கள் வட்டாரத்தில் கூறப்பட்டு வந்தது.
இந்த ஜெயஸ்ரீ தனது முகநூல் பக்கத்தில் பதிவு ஒன்றை செய்துள்ளார் அதில், ‘I Am Back ‘ என்று குறிப்பிட்டுள்ளார். ஏற்கனவே ஜெயஸ்ரீ நடன பள்ளி ஒன்றை நடத்தி வருகிறார். எனவே, அவர் மீண்டும் நடிக்க போகிறாரா இல்லை நடன பள்ளியை தொடர போகிறாரா என்பது தெரியவில்லை. அதே போல நடிகை ஜெயஸ்ரீயின் மகள் ரேத்வா விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் “பொம்முக்குட்டி அம்மாவுக்கு” என்ற புதிய சீரியலில் நடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.