என்னமோ யார் வாழ்க்கையையும் கெடுக்கலைனு சொன்னியே ஜூலிமா.!

0
48923
Julie
- Advertisement -

ஜோடி’ ஷோவில் ஆடிய ஜூலியை நினைவிருக்கிறதா? உடன் ஆடிய சாய் சக்தியுடன் செட் ஆகாததால், அரை இறுதிச் சுற்றோடு நிகழ்ச்சியிலிருந்து வெளியேறியவர். பிறகு சில பல சீரியல்களில் நடித்தார். சினிமாவில் டெக்னிகல் சைடில் பணிபுரியும் மணிகண்டன் என்பவரைக் காதலித்துத் திருமணம் செய்துகொண்டார்.

-விளம்பரம்-
visalakshi actress

சிறிய இடைவெளிக்குப் பிறகு மீண்டும் சீரியல் பக்கம் வந்தார். ‘அபூர்வ ராகங்கள்’ தொடரில் 50 எபிசோடுகள் வரை வந்தவரை, மீண்டும் காணவில்லை. அதன் பின்னர் சில ரியாலிட்டி ஷோக்களில் பங்குபெற்ற இவரை சிறுது காலம் கழித்து எதிலும் காண முடியவில்லை.

இதையும் பாருங்க : நான் என்ன தவறு செய்தேன்.! அழுது புலம்பி விடியோவை வெளிட்ட ஜூலி.! ஷாக்கில் ரசிகர்கள்.! 

- Advertisement -

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற ஜூலி பேசுகையில், பிக்பாஸ்’ ஜூலி வந்தபிறகு என்னை மறந்துட்டாங்கன்னே சொல்லலாம். நான் முன்னாடி நடிச்ச சீரியல், ரியாலிட்டி ஷோ எல்லாமே மறக்கடிக்கப்பட்ருச்சுனும் சொல்லலாம். என்னோட ஒரிஜினல் பேரு விஷாலாட்சி.பேசாம இந்தப் பெயரையே இனி கன்டினியூ பண்ணலாமானு யோசிட்டிருக்கேன். வாய்ப்பு எப்படிப் போச்சுனா, நான் நிகழ்ச்சிகள்ல கலந்துக்கிட்டு வருவேன்.

julie

நிகழ்ச்சிக்காக ஃபாரின்கூட போயிட்டு வருவோம். அதுக்காக என்னைக் கூப்பிடறதுக்குப் பதிலா, ‘பிக்பாஸ்’ ஜூலி நம்பருக்குக் கால் பண்ணிடுவாங்க. அவங்களும் ‘ஆமாங்க நான்தான் ஜூலி’னு சில நிகழ்ச்சிகள்ல கலந்துருக்காங்க. அதேநேரம் சில ஒருங்கிணைப்பாளர்கள் தெளிவா, ‘இல்லைங்க நாங்க கூப்பிடுறது ‘ஜோடி’ ஜூலியை’னும் சொல்லியிருக்க்காங்களாம்.’ எனச் சிரிக்கிறார், விஷாலாட்சி என்கிற ஜூலி.

-விளம்பரம்-

Advertisement