என்னய்யா இது, பிக் பாஸ் ஐக்கி பெர்ரி போன்ற ஹேர் ஸ்டைலில் நாயகி சீரியல் நடிகை.

0
6850
vidhya
- Advertisement -

சின்னத்திரை, தமிழ் சினிமாவிற்கு பல்வேறு நடிகர் நடிகைகளை உருவாக்கி கொடுத்திருக்கிறது. சந்தானம், சிவகார்த்திகேயன் தொடங்கி பிரியா பவானி ஷங்கர், வாணி போஜன் வரை சின்னத்திரையில் இருந்து வந்த பல்வேறு நடிகர் நடிகைகள் தற்போது சினிமாவில் ஜொலித்து வருகின்றனர். அதே போல ஆரம்பத்தில் சினிமாவில் நடித்து வந்த பல்வேறு நடிகர் நடிகைகள் பின்னர் வாய்ப்புகள் குறையவே சீரியல் பக்கம் வந்த கதைகளையும் நாம் அறிவோம்.

-விளம்பரம்-

அந்த வகையில் தற்போது சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும்’ நாயகி ‘என்ற தொடரில் ஆனந்தி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வரும் வித்யா பிரதீப்பும் திரைப்படத்திலிருந்து சீரியல் பக்கம் வந்தவர்தான்.மருத்துவத்துறையில் ஒரு நல்ல அங்கீகாரத்தை பெற்றுள்ள வித்யா நடிப்பில் தனக்கு இருந்த ஆர்வம் காரணமாகத்தான் சீரியலில் நடிக்கத் துவங்கினார்.

இதையும் பாருங்க : 500கும் மேற்பட்ட படங்கள், 3 தேசிய விருதுகள் வென்ற இந்தியன், அந்நியன் பட நடிகர் காலமானார்.

- Advertisement -

ஆரம்பத்தில் செய்தித்தாள் மற்றும் பத்திரிக்கைகளில் விளம்பர மாடலாக நடித்து வந்தார் வித்யா.மேலும், இவரை தமிழில் முதன்முதலில் அறிமுகம் செய்தது இயக்குனர் ஏ எல் விஜய் தான்.இவரது இயக்கத்தில் கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியான ‘சைவம்’ படத்தில் வித்யா, தேன்மொழி என்ற கதாபாத்திரத்தில் பேபி சாராவின் அம்மாவாக நடித்திருந்தார். அதன்பின்னர் பசங்க2, ஒண்ணுமே புரியல அச்சமின்றி போன்ற பல்வேறு படங்களில் சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்து வந்தார் வித்யா.

சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி புகைப்படங்களை வைத்து விடுவது வழக்கம்.அதே போல இதுவரை இவர் சீரியலிலும் சரி படங்களிலும் சரி மிகவும் குடும்ப குத்துவிளக்காக தான் நடித்திருந்தார். இப்படி ஒரு நிலையில் இவர் மாடர்ன் உடையில் தலையில் வெள்ளை முடியுடன் இருக்கும் புகைப்படங்கள் வைரலாக பரவி வருகிறது இதை பார்த்த பலரும் தற்போது பிக் பாஸ் சீசன் 5வில் பங்கேற்றுள்ள ஐக்கி பெர்ரியோடு ஒப்பிட்டு வருகின்றனர்.

-விளம்பரம்-
Advertisement