500கும் மேற்பட்ட படங்கள், 3 தேசிய விருதுகள் வென்ற இந்தியன், அந்நியன் பட நடிகர் காலமானார்.

0
1227
nedumudi
- Advertisement -

பிரபல நடிகர் நெடுமுடி வேணு அவர்கள் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் உயிரிழந்த சம்பவம் தற்போது திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. பிரபல நடிகர் நெடுமுடி வேணு அவர்கள் மலையாள திரைப்படத்தின் மூலம் தான் சினிமா உலகிற்கு அறிமுகமானவர். இவர் தமிழில் கமலஹாசன் நடிப்பில் வெளிவந்த இந்தியன் படத்தில் சிபிஐ ஆபீசராக மிரட்டியிருப்பார். அதை தொடர்ந்து இவர் அண்ணியன், பொய் சொல்ல போறோம், சர்வம் தாளமயம் போன்ற பல படங்களில் தன்னுடைய நடிப்பு திறமையை வெளிப்படுத்தினார்.

-விளம்பரம்-
Nedumudi Venu | Antru Kanda Mugam

தற்போது இயக்குனர் சங்கரின் இந்தியன் 2 படத்திலும் இவர் நடித்து இருந்தார்.இவர் கேரள மாநிலம் ஆலப்புழாவில் உள்ள நெடுமுடியில் பிறந்தவர். இவருடைய இயற்பெயர் கேசவன் வேணுகோபால். இவர் 1978 ஆம் ஆண்டு தான் சினிமா உலகிற்கு வந்தார். இதனைத் தொடர்ந்து இவர் பல்வேறு நாடகங்களிலும் நடித்துள்ளார். மேலும், 1990ல் வெளியான His Highness Abdullah என்ற மலையாளத் திரைப்படத்தில் சிறந்த குணச்சித்திர நடிகருக்காக இவருக்கு தேசிய விருது கிடைத்தது.

இதையும் பாருங்க : நமீதா வெளியேறிய நிலையில் மிளா உள்ளேவா ? – பிக் பாஸில் கலந்துகொள்வது குறித்து அவரே அளித்த விளக்கம்.

- Advertisement -

அதுமட்டும் இல்லாமல் இவர் மூன்று முறை தேசிய விருது வாங்கியுள்ளார். அதோடு கேரள மாநில விருது, பிலிம்பேர் விருது எனப் பல்வேறு விருதுகளை வாங்கியுள்ளார். தற்போது இவருக்கு 73 வயதாகிறது. சமீபத்தில் நெடுமுடி வேணு அவர்கள் கொரோனா தோற்றால் பாதிப்படைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு இருந்தார். பின் சிகிச்சை பெற்று குணமடைந்த நிலையில் அவருடைய உடல்நிலை நேற்று சரியில்லாமல் இருந்தது. இவரை திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தார்கள்.

ஐசியூவில் அனுமதிக்கப்பட்ட நெடுமுடி வேணு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. பின் அவருடைய உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் அறிவித்த செய்தி சோசியல் மீடியாக்களில் வைரலானது. இதனைத் தொடர்ந்து இன்று மருத்துவமனையிலேயே அவருடைய உயிர் பிரிந்தது. இவருடைய மறைவுக்கு தமிழ், மலையாளம் உள்பட பல்வேறு சினிமா துறையிலிருந்து இரங்கலை தெரிவித்து வருகின்றனர். சோசியல் மீடியாவில் இவருக்கு இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

-விளம்பரம்-
Advertisement