90ஸ் கிட்ஸ்களின் பேவரைட் விமர்சகர், டாப் 10 சுரேஷின் மனைவி மற்றும் மகளை பார்த்துளீர்களா ?

0
1280
Suresh
- Advertisement -

சன் டிவி தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி மக்களிடையே அதிக வரவேற்பைப் பெற்ற ஒரு நிகழ்ச்சி தான் “டாப் 10 மூவிஸ்” இந்த நிகழ்ச்சியை சுரேஷ்குமார் என்பவர் தொகுத்து வழங்கினார். மேலும், இந்த டாப் 10 மூவிஸ் நிகழ்ச்சி திடீரென்று நிறுத்தப்பட்டதை தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் பல கேள்விகள் எழுந்த வண்ணம் உள்ளன. தற்போதெல்லாம், சினிமாத்துறையில் வெளியாகும் படங்கள் குறித்த தகவல்களை டிவி மூலம் தெரிந்து கொள்வதை விட ஆன்லைன் மூலம் வெகு விரைவாக மக்களை சென்றடைகிறது. இப்போதெல்லாம் படத்திற்கு சென்று கதையை தெரிந்து கொள்ளும் கூட்டத்தை விட ஆன்லைன் மூலம் கதையை தெரிந்து கொண்டு படத்திற்கு செல்கின்ற கூட்டம் தான் அதிகமாக உள்ளது.

-விளம்பரம்-

இதனாலயே நிறைய விமர்சகர்கள் முளைத்துவிட்டன.இப்போ இணையங்களின் மூலம் வெளியாகும் விமர்சனங்கள் தான் வைரலாக பரவி வருகின்றன. இணையங்களின் மூலம் விமர்சங்களை கேட்பதற்கு முன்னால் அதாவது 90 காலங்களில் மக்கள் அனைவரும் ஞாயிற்று கிழமை வந்தாலே போதும் எல்லாத்தையும் தூக்கி போட்டு டிவி முன்னாடி உட்கார்ந்து விடுவாங்க.

- Advertisement -

மேலும், இந்த வாரம் எந்த படம் முதலிடம்? எந்த படத்திற்கு நல்ல மதிப்பு? என்று தெரிந்துகொள்ளும் ஆர்வம் இருந்தது. சொல்லனும்னா ‘ஆல் டைம் ஃபேவரட் ஷோ’ன்னு கூட சொல்லலாம் டாப் 10 மூவிஸ் நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சியில் படத்தின் விமர்சனத்தை தொகுத்து வழங்கிய பிறகு தான் இணையங்களில் பரவும். டாப் 10 மூவிஸ் நிகழ்ச்சிக்கே என ஒரு தனி ரசிகர்கள் பட்டாளம் இருந்தது.

இந்த நிகழ்ச்சியில் 20 ஆண்டுகளாக ஒரே பெயரில், ஒரே டைமில், ஒரே தொகுப்பாளராக வைத்து வெற்றிகரமாக ஓடிய நிகழ்ச்சியாகும். ஆனால், கடந்த சில ஆண்டுகளாக இவர் டாப் 10 நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவது இல்லை. இருப்பினும் செய்தி தொகுப்பாளராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் இவர் மனைவி மற்றும் மகளுடன் இருக்கும் குடும்ப புகைப்படம் ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

-விளம்பரம்-
Advertisement