சீரியல் TRPயில் சன் டிவியை முந்திய விஜய் டிவி – வெளியான புள்ளி விவரம் இதோ.

0
311
- Advertisement -

தற்போது வெளியாகியிருக்கும் சீரியல் புள்ளிவிவரப்படி சன் டிவியை விஜய் டிவி முந்தி இருக்கும் தகவல் தான் இணையத்தில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது. பொதுவாக தொலைக்காட்சி என்ற ஒன்று தொடங்கியதிலிருந்தே மக்களின் பொழுதுபோக்கு அம்சமாக சீரியல்கள் விளங்குகிறது. சமீப காலமாக கொரோனா தொடங்கியதிலிருந்து சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை என அனைவரும் சின்னத்திரை பக்கம் சென்று விட்டார்கள். அதிலும் தமிழ் டிவி சேனல்கள் அனைத்திலும் எண்ணற்ற பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வருகிறது.

-விளம்பரம்-

இதனால் ரசிகர்கள் வெள்ளித்திரையை விட சின்னத்திரையை ரசிக்கும் பட்டாளம் அதிகமாகி வருகிறது. சீரியல் மட்டும் இல்லாமல் காமெடி ஷோ, பலவித ரியாலிட்டி ஷோக்கள், பட்டிமன்றங்கள், சமையல், வெரைட்டியான நிகழ்ச்சிகள் என்று ஒவ்வொரு சேனலும் புது வித்தியாசமான கதைக்களத்துடன் ஒளிபரப்பி வருகிறார்கள். கிட்டத்தட்ட 22 வருடங்களுக்கும் மேலாக இந்த நிகழ்ச்சிகள் எல்லாம் மக்களை கவர்ந்து வைத்துள்ளது.

- Advertisement -

சின்னத்திரை சீரியல்கள்:

அதிலும் வாரத்தின் முதல் நாள் திங்கள் முதல் சனிக்கிழமை வரை நாள்தோறும் காலையில் துவங்கி இரவு தூங்கும் வரை சீரியல்கள் வரிசைகட்டி டிவியில் டெலிகாஸ்ட் செய்யப்பட்டு வருகிறது. இதனால் ஒவ்வொரு சேனலும் வித்தியாசமான கதைக்களத்துடன் புதுபுது தொடர்களை ஒளிபரப்பி வருகிறார்கள். மேலும், சீரியல்கள் முதல் ரியாலிட்டி ஷோக்கள் என தமிழகத்தில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான முன்னணி சேனல்களாக சன் டிவி மற்றும் விஜய் சேனல்களாக திகழ்கிறது.

தமிழ் சேனல்கள் குறித்த தகவல்:

தமிழ் சேட்டிலைட் சேனலாக தொடங்கிய நாளில் இருந்தே சன் டிவி தான் நம்பர் ஒன் இடத்தில் இருந்து வருகிறது. கேபிள் டிவி மூலம் நகரம் , கிராமம் என்று எல்லா இடங்களிலும் சன் டிவி சேனலை தான் மக்கள் அதிகம் பார்த்து வருகிறார்கள். சன் டிவி சீரியல் தொடங்கிய சில வருடங்கள் கழித்து தான் ராஜ், விஜய் டிவி, கலர்ஸ் தமிழ் பிற சேனல்களும் தொடர்களை ஒளிபரப்ப ஆரம்பித்தார்கள். இப்படி இருக்கும் நிலையில் விஜய் டிவி ஸ்டார் விஜய் ஆக மாறின பிறகு ரியாலிட்டி நிகழ்ச்சிகள், சீரியல்கள் என புதுப்புது வித்தியாசமாக கொடுத்து மக்களை தன் பக்கம் கவர ஆரம்பித்திருக்கிறார்கள்.

-விளம்பரம்-

சன் டிவி குறித்த தகவல்:

இந்த நிகழ்ச்சிகள் எல்லாம் நகரம் தாண்டி கிராமங்களையும் ரீச் செய்திருக்கிறது. இதனால் எப்போதும் இந்த இரு சேனல்களுக்கு இடையே தான் கடும் போட்டி நிலவி வருகிறது. அதோடு சன் டிவி மற்றும் விஜய் டிவிகளில் தான் அதிக சீரியல் ஒளிபரப்பாகி வருவதால் டிஆர்பி ரேட்டிங்கில் இந்த சேனல்களின் இடையில் தான் மாற்றி மாற்றி இடம் பிடிக்கிறது. மேலும், கடந்த சில மாதங்களாக சன் டிவி சீரியல்கள் தான் டாப் 5ல் இருக்கிறது.

சீரியல் புள்ளிவிவர பட்டியல்:

இந்த நிலையில் தற்போது வெளியாகிருக்கும் புள்ளிவிவரம் பட்டியல் தான் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதாவது, Urban பகுதியில் இருப்பவர்கள் விஜய் டிவி சீரியலை தான் அதிகம் பார்க்கிறார்களாம். குறிப்பாக 11ல் இருந்து 50 வயதில் இருப்பவர்கள் விஜய் டிவி சீரியல் ரசிகர்களாம். இதை புள்ளிவிவரத்துடன் விஜய் டிவியே அதிகாரப்பூர்வமாக வெளியிட்டு இருக்கிறது. தற்போது இந்த புள்ளிவிவரப் புகைப்படம் தான் இணையத்தில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது.

Advertisement