தென்னிந்திய சினிமா உலகில் மிக பிரபலமான நடிகையாக இருப்பவர் சுனைனா. தமிழில் நடிகர் நகுல் நடிப்பில் கடந்த 2008ம் ஆண்டு வெளியான காதலில் விழுந்தேன் என்ற படத்தின் மூலம் தான் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகி இருந்தார் சுனைனா. இதனை தொடர்ந்து இவர் மாசிலாமணி, வம்சம், சமர், யாதுமாகி, தெறி, காளி, என்னை நோக்கி பாயும் தோட்டா போன்ற பல்வேறு படங்களில் நடித்து இருக்கிறார். மேலும், இவர் தமிழ் மொழியில் மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம் , கன்னடம் என பல மொழி படங்களிலும் நடித்து இருக்கிறார்.

ஆனால், இவரால் முன்னணி நடிகையாக சினிமாவில் வலம் வர முடியவில்லை. பின் இயக்குநர் ஹலிதா ஷமீம் இயக்கத்தில் வெளிவந்த “சில்லுக் கருப்பட்டி” என்ற படத்தில் நடிகை சுனைனா வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். அவருடைய கதாபாத்திரத்தை பார்த்து பலரும் பாராட்டி இருந்தார்கள். அதை தொடர்ந்து ட்ரிப் படத்தில் நடித்து இருந்தார். ஆனால், அந்த படம் எதிர்பார்த்த அளவு வெற்றியடையவில்லை.

Advertisement

பின் இவர் எரியும் கண்ணாடி என்ற படத்தில் சுனைனா நடித்து இருக்கிறார். அதன் பின் சுனைனா அவர்கள் விஷாலின் லத்தி என்ற படத்தில் நடித்து இருக்கிறார். இந்த படத்தை வினோத் குமார் இயக்கி இருக்கிறார். இந்த படத்தில் சுனைனா, சூரி, ரோபோ சங்கர் உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். இந்த படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றியடையவில்லை. தற்போது ரெஜினா என்ற படத்தில் கதாநாயகியாக சுனைனா நடித்திருக்கிறார்.

இந்த படத்தை யெல்லோ பியர் புரொடக்சன் (Yellow Bear Production) சார்பில் சதீஷ் நாயர் தயாரித்து இருக்கிறார். இந்த படத்தை சதீஸ் நாயர் தயாரித்தது மட்டுமில்லாமல் இசையமைப்பாளராகவும் அறிமுகமாகியிருக்கிறார். இந்த படத்தை மலையாள இயக்குனர் டொமின் டி’சில்வா இயக்கி இருக்கிறார். மேலும், இந்த படம் வருகிற ஜூன் 23ஆம் தேதி வெளியாகியிருக்கிறது. தற்போது இந்த படத்தினுடைய பிரமோஷன் வேலைகள் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. அதற்காக ரெஜினா பட குழு தமிழகம், ஆந்திரா, கேரளா போன்ற பிற மாநிலங்களிலும் ப்ரோமோஷன் செய்து கொண்டிருக்கின்றார்கள்.

Advertisement

இந்த நிலையில் கேரளாவில் கொச்சினில் இந்த படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் நடந்திருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகை சுனைனா கூறியிருப்பது, இந்த படத்தில் எனக்கு வாய்ப்பு அளித்த இயக்குனர், தயாரிப்பாளருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். சில்லு கருப்பட்டி படத்தில் என்னுடைய நடிப்பை பார்த்துவிட்டு தான் என்னை இந்த படத்தில் நடிப்பதற்கு இயக்குனர் அழைத்து இருந்தார். இந்த படத்தில் என்னை பார்க்கும் போது சினிமாவில் நான் நடிப்பதற்கு முன்பு இருந்த இளம் வயது சுனைனா பார்ப்பது போல் இருக்கிறது.

Advertisement

இதெல்லாம் ஒரு காலத்தில் எனக்கு கனவு போல இருந்தது. தற்போது நிஜமாக இருக்கிறது. அந்த வகையில் நான் ஆசீர்வதிக்கப்பட்டவள் ஆக உணர்கிறேன். என்னுடைய குடும்பத்தில் இருந்தும், தமிழ் ரசிகர்களிடமிருந்தும் எனக்கு அன்பும், ஆதரவும் நிறைவே கிடைத்திருக்கிறது. அவர்களுக்கு ரொம்ப நன்றி உடையவளாக இருக்கிறேன். இந்த படம் என்னுடைய திரையுலக பயணத்திலேயே ரொம்ப ரொம்ப முக்கியமான படம். 2018 ஆம் ஆண்டில் நான் என்ன பண்ண வேண்டும் என எல்லோரும் எனக்கு ஆலோசனை சொல்ல ஆரம்பித்தார்கள்.

இதனால் அதை நான் கேட்டு கேட்டு கலைப் ஆகிவிட்டேன். ஆனால், நான் என்ன செய்ய விரும்புகிறேன் என்று 2018 ஆம் ஆண்டிலேயே முடிவு செய்தேன். அதை தொடர்ந்து ஒரு நடிகையாக வேண்டும் என்று அதற்கு தேவையான படங்களை தேர்வு செய்ய ஆரம்பித்தேன். வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து வருகிறேன். ரெஜினாவும் அந்த பட்டியலில் ஒன்றாக இருக்கிறது. என்னுடைய ரசிகர்களுக்கு விதவிதமான கதாபாத்திரங்களை காட்ட விரும்புகிறேன். நான் நடிக்கும் ஒவ்வொரு படங்களும் என்னுடைய வித்தியாசமான கதாபாத்திர அனுபவம் அவர்களுக்கு கொடுக்க விரும்புகிறேன் என்று கண்ணீருடன் பல விஷயங்களை சுனைனா பகிர்ந்து இருக்கிறார்.

Advertisement