இசைஞானி இளையராஜா தனது படங்களில் இல்லாமலே ஜெயித்துக் காட்டிய இயக்குனர் குறித்து தகவல் தான் இணையத்தில பரவி வருகிறது. தமிழ் சினிமாவில் இசைஞானி என்று அந்தஸ்துடன் பல ஆண்டுகளாக இசை துறையில் ஜாம்பவானாக திகழ்ந்து வருபவர் இளையராஜா. இவர் 70 காலகட்டம் துவங்கி தற்போது வரை படங்களில் இசை அமைத்து வருகிறார். இவருடைய இசையை ரசிக்காத ரசிகர்கள் யாரும் இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.
அதோடு இவரது இசைக்காகவே ஓடிய படங்கள் பல உள்ளது. 80, 90 காலகட்டங்களில் இளையராஜா தான் கிங் என்று சொல்லும் அளவிற்கு இவர் இசையமைத்த படங்கள் எல்லாம் வெற்றி பெற்றது. அதாவது ஒரு படம் ஹிட் ஆகுதோ இல்லையோ, இவர் பாடல் மூலம் அந்த படம் மக்களிடம் ரீச் ஆகிவிடும். அந்த அளவிற்கு அந்த காலத்தில் இசைஞானி தான் அனைத்து படங்களின் வெற்றிக்கும் ஒரு காரணமாக இருந்தார்.
இளையராஜா குறித்து:
எப்பொழுதும் இவருடைய பாடல்கள் தான் அனைவருக்கும் ஒரு தாலாட்டாகவும், காதலுக்கு தூதுவாகவும், சோகத்திற்கு ஆறுதலாகவும் பல வழிகளில் ஒரு தீர்வாக இருக்கிறது. இதுவரை ஆயிரம் படங்களில், ஏழாயிரம் பாடல்களுக்கு மேல் இசை அமைத்திருக்கிறார் இளையராஜா. ஆனால், இளையராஜாவை தனது படங்களில் பயன்படுத்தாமலே, தான் இயக்கிய 35 படங்களிலும் வெற்றி பெற்றிருக்கிறார் சுந்தர்.சி.
சுந்தர்.சி குறித்து:
தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராக வலம் வந்து நடிகராக கலக்கி கொண்டு இருப்பவர் சுந்தர்.சி . இவர் 1995 ஆம் ஆண்டு வெளிவந்த ‘முறை மாமன்’ என்ற படத்தினை இயக்கியிருக்கிறார். இதுதான் சுந்தர்.சி இயக்கிய முதல் தமிழ் திரைப்படம். இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று சூப்பர் ஹிட் ஆனது. இதனைத் தொடர்ந்து முறை மாப்பிள்ளை, உள்ளத்தை அள்ளித்தா, மேட்டுக்குடி, அருணாச்சலம், உள்ளம் கொள்ளை போகுதே, அன்பே சிவம், அரண்மனை உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்திருக்கிறார் சுந்தர்.சி
கதையை நம்பிய சுந்தர்.சி
இதுபோல் பல சூப்பர் படங்களை கொடுத்த சுந்தர்.சி ஏதோ ஒரு காரணத்தால் இளையராஜாவை வைத்து எந்த படங்களிலும் கமிட் ஆகவில்லை என்பதுதான் ஆச்சரியப்பட வைக்கிறது. ஏனென்றால் வளர்ந்து வரும் இயக்குனர்களாக இருக்கட்டும், பெரிய இயக்குனர்களும் அவர்களுடைய படங்களில் இளையராஜா கால்ஷீட் இருந்தால் நன்றாக இருக்கும் என்று எண்ணிய காலம் அப்பொழுது. அந்த நேரத்திலும் வளர்ந்து வரும் சுந்தர் சி, இளையராஜாவை பொருட்படுத்தாமல் தன்னுடைய கதையை மட்டுமே நம்பி படங்களை எடுத்தார்.
புதுமுகங்களுக்கு வாய்ப்பு:
மேலும் சுந்தர்.சி அவர்கள் எப்படி வளர்ந்து வரும் ஒரு இயக்குனராக கஷ்டப்பட்டு படிப்படியாக வளர்ந்தாரோ. அதே மாதிரி அப்பொழுது வளர்ந்து வரும் இசையமைப்பாளர்களை தூக்கிவிடும் விதமாக அவர்களுக்கு தனது படங்களில் வாய்ப்பு அளிப்பதில் கவனமாக இருந்தார். இதுதான் சுந்தர்.சி யின் வெற்றிக்கு கிடைத்த பரிசாகவும் பார்க்கப்படுகிறது. எது எப்படி இருந்தாலும் இளையராஜாவின் தீவிர ரசிகராக இருக்கும் சுந்தர்.சி, தற்போது வரை அவரது கூட்டணியில் ஒரு படம் கூட எடுக்காமல் ஜெயித்துக் காட்டி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.