பாரதி கண்ணம்மா 2வில் வரும் இப்படி ஒரு நடிகை. இவரை முரளியின் படத்தில் பார்த்த மாதிரி இருக்கா ? இவர் யார் தெரியுமா? பாரதி கண்ணம்மா 2வில் வரும் இப்படி ஒரு நடிகை.

0
581
sundara
- Advertisement -

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது. அந்த வகையில் டிஆர்பி ரேட்டிங்கில் உச்சத்தில் இருக்கும் தொடர்களில் ஒன்றாக பாரதி கண்ணம்மா சீரியல் திகழ்கிறது. இந்த தொடர் தொடங்கிய காலத்திலிருந்து இப்போது வரை விறுவிறுப்புடனும், பல திருப்பங்களுடனும் சென்று கொண்டிருக்கின்றது.மேலும், இந்த தொடரில் பாரதியாக அருண் பிரசாத் நடிக்கிறார். முதலில் கண்ணம்மாவாக ரோஷினி ஹரிப்ரியன் நடித்து இருந்தார்.

-விளம்பரம்-

பல திருப்பங்களுடன் சென்று கொண்டிருந்த பாரதி கண்ணம்மா சீரியல் முடிவடைய இருக்கிறது என்று கடந்த சில மாதங்களாகவே தகவல் வெளியான வண்ணம் இருந்தது. ரசிகர்களும் இப்போது முடிந்துவிடும், அப்போது முடிந்துவிடும் என்று காத்து காத்து 3 மாதங்களாக சென்று விட்டது. மேலும் இந்த சீரியலின் இயக்குனர் பிரவீன் பென்னட் எதிர்பாராததை எதிர்ப்பாருங்கள் என்று பலவிதமான ட்விட்களையும் இந்த சீரியலில் கொடுத்து கதையை நகர்த்தி வந்தார்.

- Advertisement -

பாரதி கண்ணம்மா 2 :

இப்படி சென்றுகொண்டிருந்த நிலையில் கடந்த 4ஆம் தேதி சீரியல் முடிவடைந்து பாரதி கண்ணம்மா சீசன் 2 தொடங்கி தற்போது ஒரு வாரம் முடிவடைந்து இருக்கிறது. கடந்த சீசனை போல இந்த சீசனும் அதே பெயரில் தான். சீரியலில் உள்ள பாரதி, கண்ணம்மா, சௌந்தர்யா, அஞ்சலி, அகிலன், வெண்பா போன்ற கதாபாத்திரங்கள் அதே பெயருடன் தான் இருக்கிறது. ஆனாலும் சில புதிய கதாபாத்திரங்களும் இந்த சிரியலில் அறிமுகமாகியிருக்கின்றனர். அந்த வகையில் இந்த சீரியலை இணைந்திருப்பார் தான் நடிகை ராதா.

சுந்தரம் ட்ராவல்ஸ் ராதா :

தமிழில் சினிமாவில் கடந்த 2002 ஆம் ஆண்டு முரளி, வடிவேலு, மணிவண்ணன், வினுசக்ரவர்த்தி போன்ற பலர் நடிப்பில் வெளியான ‘சுந்தரா ட்ராவல்ஸ்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ராதா. சுந்தரா ட்ராவல்ஸ் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. ஆனால், இந்த படத்தில் நடித்த இவர் அதன் பின்னர் இவர் நடித்த படங்கள் பெரிதாக வெற்றியடையாத காரணத்தினால் தமிழில் ஒரு சில படங்களில் மட்டுமே நடித்து இருந்தார்.

-விளம்பரம்-

பாரதி கண்ணமாவில் ராதா :

இப்படி சில வருடங்கள் நடிக்காமல் இருந்த நடிகை ராதா சமீபத்தில் தன பைரவி என்ற சிறியலில் நடித்தார். இந்த நிலையில் தான் விஜய் டிவியில் தற்போது ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா 2 சிரியலில் சில்லி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இவர் வீட்டிற்கு அடைக்கலமாக வந்து பின்னர் அங்கேயே குழந்தைகளுடன் தங்கி தற்போது அந்த குடும்பத்தை நாட்டாமை செய்து கொண்டிருக்கும் கொடூர வில்லியாக நடித்து வருகிறார்.

விமர்சிக்கும் நெட்டிசன்கள் :

நடிகை ராதா சுந்திரம் ட்ராவல்ஸ் படத்தில் கதயனகியாக நடித்த நிலையில் தற்போது பாரதி கண்ணம்மா சீசன் 2 தொடங்கிய முதலே இப்படி வில்லியாக நடிப்பதினால் ரசிகர்கள் மத்தியில் அதிர்ப்தி ஏற்பட்டுள்ளது. குறிப்பாக குடியேறிய வீட்டிற்கே குண்டு வைக்கும் படியான இவரின் கதாபாத்திரத்திற்கு பலவிதமான விமர்சங்கள் வந்த வண்ணமாக இருக்கிறது.

Advertisement