சின்னத்திரை சீரியல் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் கேப்ரில்லா. இவர் தடை செய்யப்பட்ட டிக் டாக் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர். அதன் பின் விஜய் தொலைக்காட்சியில் கடந்த 2016 ஆம் ஆண்டு ஒளிபரப்பாகி இருந்த கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று பலருக்கும் பரிட்சயமானார் கேப்ரில்லா. அதற்கு பிறகு இவர் எண்ணற்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்று இருக்கிறார். அதுமட்டுமில்லாமல் பல ஷார்ட் பிலிம்களில் கூட கேப்ரில்லா நடித்திருக்கிறார். கடந்த 2019ஆம் ஆண்டு லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிப்பில் வெளிவந்து சூப்பர் ஹிட் கொடுத்த படம் ஐரா.
இந்த திரைப்படத்தில் சிறுவயது நயன்தாரா கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார் கேப்ரில்லா. அதனை தொடர்ந்து இவர் பல படங்களில் துணைக் கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். தற்போது இவர் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சுந்தரி சீரியலில் நடித்து வருகிறார். இந்த சீரியல் மூலம் கேப்ரில்லா தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை சேர்த்து வைத்து இருக்கிறார். மேலும், இந்த சீரியல் தொடங்கிய நாளிலிருந்து இன்று வரை மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது.
கேப்ரில்லாவின் சுந்தரி சீரியல்:
எப்படியாவது ஐஏஎஸ் ஆக வேண்டும் என்ற கனவோடு எண்ணற்ற இன்னல்களை சமாளித்து வரும் கதாபாத்திரம் தான் சுந்தரி. அதுமட்டுமில்லாமல் சுந்தரி கருப்பு நிறம் என்பதால் நிறத்திற்கும் சாதனை செய்வதற்கும் சம்பந்தமில்லை என்பதை முறியடித்து போராடி வருகிறார். அதனாலே இந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் சீக்கிரமாக இடம் பிடித்து விட்டது. அதுமட்டும் இல்லாமல் கேப்ரில்லா நடித்து வரும் சுந்தரி சீரியல் டிஆர்பி ரேட்டிங்கில் முன்னிலையில் உள்ளது.
ஏ ஆர் ரகுமான் இசையில் கேப்ரில்லா:
இதனை தொடர்ந்து இவர் இசைப்புயல் ஏ ஆர் ரகுமான் இயக்கியிருக்கும் ஆல்பம் சாங்கில் பணியாற்றி இருக்கிறார். ஏ ஆர் ரகுமான் அவர்கள் ‘மூப்பில்லா தமிழ் தாயே’ என்ற ஆல்பம் ஒன்றை இயக்கி இருக்கிறார். இந்த பாடலில் கேப்ரில்லா பாடி இருக்கிறார். மேலும், சுந்தரி சீரியலில் கேப்ரில்லா எப்படி திறமையான, துடிப்பான பெண்ணாக இருக்கிறாரோ நிஜத்திலும் அப்படித்தான் இருக்கிறார். சீரியலை தாண்டி கேப்ரில்லா சோசியல் மீடியாவில் படு பிஸி என்று சொல்லலாம்.
விழாவில் கேப்ரில்லா செய்தது:
அடிக்கடி போட்டோ ஷூட், ரீல்ஸ் வீடியோக்களை வெளியிடுவது வழக்கம். இதனால் இவரை சோசியல் மீடியாவில் எக்கச்சக்கமான ரசிகர்கள் பாலோ செய்கிறார்கள். இந்த நிலையில் சுந்தரி கேப்ரில்லா தனது கணவரிடம் பகிரங்கமாக இன்ஸ்டாவில் மன்னிப்பு கேட்டு இருக்கும் பதிவு தற்போது சோசியல் மீடியாவில் பரவலாகி வருகிறது. அது என்னவென்றால், சமீபத்தில் சன் டிவி குடும்ப விருதுகள் நடந்து முடிந்தது. இந்த நிகழ்ச்சியில் சுந்தரி சீரியலுக்காக கேப்ரில்லாவுக்கு ஃபேவரட் ஹீரோயின் பிரிவில் விருது வழங்கப்பட்டது. பின் விருது மேடையில் கேப்ரில்லா அவர்கள் தனது அம்மா மற்றும் அம்மாச்சி பற்றி பேசி இருந்தார்.
கணவனிடம் மன்னிப்பு கேட்ட கேப்ரில்லா:
ஆனால், பதட்டத்தில் தனது காதல் கணவரை பற்றி பேச மறந்து விட்டார். அதற்கு மன்னிப்பு கேட்டு தான் தன்னுடைய காதலை வெளிப்படுத்தி இருக்கிறார் கேப்ரில்லா. இதைப்பார்த்த கேப்ரில்லாவின் கணவர் கூறியிருப்பது, உண்மையை தானா சொல்ல முடியும். அம்மா, அம்மாச்சி பற்றி பேசியது சரியே என்கிறார். அதற்கு கேப்ரில்லா, நீதான் என் வாழ்நாள் விருது என்று பதில் பதிவு போட்டு தன்னுடைய காதலை வெளிப்படுத்தி இருக்கிறார். இப்படி கணவன் மனைவி இருவரும் போட்ட போஸ்ட் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி லைக்ஸ்குகளை குவித்து வருகிறது.