முடிவுக்கு வருகிறதா சுந்தரி சீரியல், காரணம் என்ன? – அதிர்ச்சியில் ரசிகர்கள்

0
410
- Advertisement -

சன் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சுந்தரி’ சீரியல், விரைவில் முடிவுக்கு வர இருக்கும் தகவல் தான் தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. சமீப காலமாகவே சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சின்னத்திரை பக்கம் வந்து விட்டார்கள். அதிலும் தமிழ் டிவி சேனல் அனைத்திலும் எண்ணற்ற பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வருகிறது. குறிப்பாக ஒவ்வொரு சேனலிலும் புது புது சீரியல் வித்தியாசமான கதைகளுடன் ஒளிபரப்பி வருகிறார்கள்.

-விளம்பரம்-

வாரத்தின் முதல் நாள் திங்கள் முதல் சனிக்கிழமை வரை நாள்தோறும் காலையில் தொடங்கி இரவு வரை சீரியல்கள் வரிசை கட்டி டிவியில் டெலிகாஸ்ட் செய்யப்பட்டு வருகிறது. அந்தவகையில், சன் டிவியில் ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் சீரியல் சுந்தரி. இந்த சீரியல் மூலம் கதாநாயகி கேப்ரில்லா தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை சேர்த்து வைத்திருக்கிறார். இந்த சீரியல் தொடங்கிய நாளிலிருந்து இன்று வரை மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது.

- Advertisement -

சுந்தரி:

எப்படியாவது ஐஏஎஸ் ஆக வேண்டும் என்ற கனவோடு எண்ணற்ற பிரச்சனைகளை சமாளித்து போராடும் கதாபாத்திரம் தான் சுந்தரி. அதுமட்டுமில்லாமல் சுந்தரி கருப்பு நிற உடையவள். ஆகவே, நிறத்திற்கு சாதனை செய்வதற்கும் சம்பந்தமில்லை என்பதை முறியடித்து போராடி வருகிறார் சுந்தரி. அதனாலே, இந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் சீக்கிரமாக இடம் பிடித்து விட்டது. இந்த சீரியலின் முதல் பாகத்தை முடித்துவிட்டு தற்போது இரண்டாம் பாகம் ஒளிபரப்பி வருகிறார்கள்.

சுந்தரி 2:

இந்தத் தொடரில் கேப்ரில்லா, கிருஷ்ணா, ஜிஷ்ணு மேனன், ஸ்ரீ கோபிகா, பேபி அஹானா, லிதன்யா சபாலன் உள்ளிட்டோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள். இந்த சீரியலில் முதல் பாகத்திற்கு கிடைத்த வெற்றியால் இரண்டாம் பாகத்தை கடந்த ஆண்டு துவங்கினார்கள். அதன்படி சுந்தரி தற்போது ஐஏஎஸ் அதிகாரியாக இருக்கிறார். மேலும் கார்த்திக் மற்றும் அனுவிற்கு பிறந்த குழந்தை தமிழ் பாப்பாவுக்கு அம்மாவாகவும் வாழ்ந்து வருகிறார்.

-விளம்பரம்-

கதைக்களம்:

ஆனால் கார்த்திக், எப்படியாவது சுந்தரியிடம் இருந்து தனது குழந்தையை பிரிக்க வேண்டும் என்று நினைக்கிறார். ஆனால் சுந்தரி கார்த்திக்கின் எண்ணம் நிறைவேறாமல் இருக்க போராடுகிறார். சுந்தரிக்கு உறுதுணையாக வெற்றி இருக்கிறார். இந்நிலையில் கார்த்திக்கின் எண்ணம் நிறைவேறுமா? இறந்துவிட்டார் என்று எண்ணிய அனு மீண்டும் சீரியலுக்குள் வருவாரா? என யூகிக்க முடியாத கதைகளைத்துடன் தொடர் ஒளிபரப்பாகி வருகிறது.

முடிவுக்கு வரும் சுந்தரி:

கன்னட மொழியில் துவங்கப்பட்ட சுந்தரி என்ற தொடரின், தமிழாக்கம் ஆகவே அதே பெயரில் கடந்த 2021 ஆம் ஆண்டு சன் டிவியில் சுந்தரி துவங்கப்பட்டது. சுமார் 1000 எபிசோடுகளை கடந்து ஒளிபரப்பாகி வரும் சுந்தரி சீரியலின் டிஆர்பி மிகவும் பின்னடைந்து இருக்கிறது. அதனால் இந்த தொடரை சீக்கிரம் முடிக்க சன் டிவி தரப்பில் முடிவு செய்துள்ளார்கள் என தகவல் வெளியாகி உள்ளன. மேலும், இந்த சீரியலை முடித்துவிட்டு வேறு புதிய சீரியலை ஒளிபரப்ப தயாராக உள்ளார்களாம். ஆனால் இது குறித்து சேனல் தரப்பில் இருந்து எந்த ஒரு தகவலும் அதிகாரப்பூர்வமாக வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement