உயிரிழந்த ரசிகரின் குடும்பத்திற்கு மாதம் இவ்வளவு பண உதவியா.!மாநகரம் நடிகரின் செயல்.!

0
615
managaram
- Advertisement -

தமிழில் கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான ‘மாநகரம்’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இந்த படத்தின் மூலம் பிரபலமடைந்தவர் நடிகர் சந்தீப் கிஷான். இவர் ஏற்கனவே ‘யாருடா மகேஷ்’ என்ற படத்திலும் நடித்துள்ளார். சமீபத்தில் உயிரழந்த தனது ரசிகரின் குடும்பத்தை தத்தெடுத்துள்ளார் சந்தீப்.

-விளம்பரம்-

கடப்பா ஸ்ரீனு என்பவர் ஆந்திரா சந்தீப் ரசிகர் மன்றத்தின் நிர்வாகி ஆவார். மேலும், இவர் சந்தீப்பின் தீவிர ரசிகரும் ஆவர். கடப்பா ஸ்ரீனு கடந்த நேற்று (ஜனவரி 18) மாரடைப்பால் காலமானார். இந்த தகவலை கேட்டு நடிகர் சந்தீப் மிகவும் மனம் நொந்து போய்யுள்ளார்.

இதையும் படியுங்க : கே ஜி எப் நடிகரின் பிறந்தநாளில் தீ குளித்த ரசிகர்.! கேவலம் இந்த காரணத்திற்காகவா? 

- Advertisement -

உயிரிழந்த தனது ரசிகருக்கு ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்த நடிகர் சந்தீப். ஸ்ரீனுவுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை பதிவிட்டு ஸ்ரீனு தனக்கு அளித்த ஆதரவுக்கு நான் எப்போதும் நன்றியுடன் இருப்பேன் என்றும் கூறியிருந்தார்.

ஸ்ரீனுவுக்கு திருமணம் முடிந்த ஒரு அக்காவும் வருமானம் இல்லாத ஒரு அம்மாவும் இருக்கிறார் என்பதை அறிந்த நடிகர் சந்தீப், ஸ்ரீனுவின் இறுதி சடங்கு செலவுகளை ஏற்றதோடுமட்டுமல்லாமல் அவரது குடும்பத்திற்கு மாதம் 10 ஆயிரம் ரூபாய் அளிப்பதாகவும் உறுதி அளித்துள்ளார்.

-விளம்பரம்-
Advertisement