ஸ்ரீ தேவி பற்றி ட்விட்டரில் கருத்து தெரிவித்த சுந்தர் பிச்சை – கோபத்தில் தமிழர்கள்

0
6234
sunderpichai

நடிகை ஸ்ரீதேவியின் மறைவிற்கு உலகில் உள்ள பலரும் அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். தமிழகத்தை சேர்ந்தவரும், கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான சுந்தர் பிச்சையும் ஸ்ரீதேவி மறைவிற்கு அஞ்சலி செலுத்தி ஒரு ட்வீட் போட்டிருந்தார்.

sridevi

ஸ்ரீதேவி நமக்கெல்லாம் ஒரு முன்னோடி. அவரிடம் இருந்து நான் நிறைய கற்றுள்ளேன். அவர் நடித்த படங்களில் எனக்கு மிகவும் பிடித்தது ‘சத்மா’ என்ற படமாகும்.என ட்வீட் செய்திருந்தார்.

இதனை பார்த்த நெட்டிசன்கள் அதிலும் ஒரு ட்விஸ்ட்டை கண்டுபிடித்துள்ளனர்.சத்மா படம் 1983ஆம் ஆண்டு வெளிவந்தது. இது ஒரு ஹிந்தி படம். இது 1982ல் தமிழில் வெளிவந்த மூன்றாம்பிறை படத்தின் ரீமேக் ஆகும்.

sundarpichai

1983ஆம் ஆண்டு சுந்தர் பிச்சைக்கு 10 வயது தான். அப்போது மதுரையில் ஹிந்தி படங்களை பார்க்க முடியாது. அந்த அளவிற்கு மதுரையில் வசதி இல்லை. அதனால் அவர் கண்டிப்பாக மூன்றாம் பிறை படத்தை தான் பார்த்திருக்க வேண்டும். இதனை தான் அவர் சத்மா என்கிறார்.என அவரது அந்த ட்வீட்டை வைத்து சர்ச்சை ஏற்படுத்தி வருகின்றனர்.