குடித்துவிட்டு வடிவேலு, முரளி செய்த ரகளை, அவர்களை முடித்துவிட்ட விஜயகாந்த் – தயாரிப்பாளர் தங்கராஜ் சொன்ன விஷயம்

0
171
- Advertisement -

கேப்டன் விஜயகாந்த் குறித்து, தயாரிப்பாளர் தங்கராஜ் கூறியிருக்கும் விஷயம்தான் இணையத்தில் வேகமாக பரவி வருகின்றது. மக்கள் மத்தியில் கேப்டன் என்ற பட்டத்தோடு என்றென்றும் மறக்க முடியாத ஒரு நபராக திகழ்பவர் விஜயகாந்த். இவர் நடிகர், அரசியல்வாதி என்பதை தாண்டி ஒரு நல்ல மனிதர் என்றே சொல்லலாம். புரட்சிக் கலைஞர் என்று எல்லோராலும் அழைக்கப்பட்டவர். தமிழ் மொழியை தவிர வேறு எந்த மொழியிலும் நடிக்காத ஒரே ஒரு நடிகர் விஜயகாந்த் தான்.

-விளம்பரம்-

இவர் ஏழை, உதவி கேட்டு வருபவர்கள் என அனைவரையும் சமமாக பார்த்து அவர்களுக்கு உணவு அளித்து மகிழ்ந்தவர் . வளரும் கலைஞர்களுக்கு வாய்ப்பளித்து உதவியவர். இப்படி பல உதவிகளை செய்த இவர் தேமுதிக என்ற கட்சியை தொடங்கி அரசியலில் குதித்தார். பின் சில ஆண்டுகளாகவே உடல் நலக்குறைவின் காரணமாக சினிமா மற்றும் அரசியல் இரண்டிலும் இருந்து விலகி சிகிச்சை பெற்று வந்த நிலையில், கடந்த 2023 ஆம் ஆண்டு, டிசம்பர் மாதம் 23ஆம் தேதி விஜயகாந்த் இயற்கை எய்தினார்.

- Advertisement -

விஜயகாந்த் மறைவு:

இவரின் மறைவு ஒட்டுமொத்த தமிழகத்தையும் புரட்டிப்போட்டு இருந்தது. கேப்டனின் மறைவிற்கு பல்வேறு அரசியல் பிரபலங்களும், திரை பிரபலங்களும் இரங்கல் தெரிவித்து இருந்தார்கள். விஜயகாந்தின் உடல் அரசு மரியாதை உடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. அதன் பின் விஜயகாந்தின் பணியை பாராட்டி “பத்மபூஷன்” விருது அவர் மறைவதற்கு சில மாதங்கள் முன்பே அரசு அறிவித்த நிலையில், அவரின் மறைவுக்குப் பிறகு விஜயகாந்தின் மனைவி பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் குடியரசுத் தலைவர் திரௌபதி மர்முவிடம் அந்த விருதை பெற்றுக் கொண்டார்.

விஜயகாந்த் குறித்த தகவல்:

மேலும், விஜயகாந்த் அவர்கள் நடிப்பையும் தாண்டி பெரிய ஹீரோ என்ற தலைக்கனம் இல்லாதவர். அனைவருடன் சேர்ந்து பழகி உண்ணும் உணவு கொண்டவர். பல தொழில்நுட்ப கலைஞர்களுக்கு உதவி செய்திருக்கிறார். தற்போது தமிழ் சினிமாவில் உச்சத்தில் இருக்கும் நடிகர்களுக்கு ஆரம்பத்தில் உதவியிருந்தது விஜயகாந்த் தான். இப்படி இவர் மறைந்த பிறகும், பிரபலங்கள் பலரும் பல விஷயங்களை கூறி வருகிறார்கள். அப்படியான ஒரு விஷயம் தான் தற்போது வெளிவந்துள்ளது.

-விளம்பரம்-

சுந்தரா டிராவல்ஸ்:

அந்த வகையில் கடந்த 2002 ஆம் ஆண்டு முரளி, வடிவேலு, வினு சக்கரவர்த்தி உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான காமெடி படம் தான் ‘சுந்தரா ட்ராவல்ஸ்’. இந்தப் படம் வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இந்தப் படத்தினை இப்போது தொலைக்காட்சியில் ஒளிபரப்பினாலும் படத்தினை முழுவதுமாக பார்த்துவிட்டு அடுத்த வேலையை கவனிக்கும் அளவிற்கு ரசிகர்களை இந்த படம் உருவாக்கி வைத்துள்ளது. இந்த படத்தினை இயக்குனர் தாஹா இயக்கினார். மேலும், இந்த படத்தினை யுவஸ்ரீ கிரியேஷன்ஸ் தங்கராஜ் தயாரித்திருந்தார்.

தயாரிப்பாளர் தங்கராஜ் பேட்டி:

சமீபத்தில் படத்தின் தயாரிப்பாளர் தங்கராஜ் ‘சுந்தரா டிராவல்ஸ்’ படம் குறித்து ஒரு பேட்டியில் பேசியுள்ளார். அதாவது படப்பிடிப்பின் போது, முரளியின் வடிவேலும் குடித்துவிட்டு சரியாக படப் பிடிப்புக்கு ஒத்துழைப்பு வழங்காமல் இருந்துள்ளனர். இதனால் தயாரிப்பாளர் ஒரு கட்டத்தில் படத்தினை கைவிட்டு விடலாம் என்ற எண்ணத்தில் விருந்துள்ளார். இது தொடர்பாக விஜயகாந்த்திடம் உதவி கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த விஜயகாந்த், படப்பிடிப்பு தளத்திற்குச் சென்று, முரளி மற்றும் வடிவேலுவை தொலைத்துவிடுவேன் என்று கடுமையாக மிரட்டி உள்ளார். அதன் பின்னர்தான், இருவரும் பிரச்சனை செய்யாமல் படத்தை முடித்துக் கொடுத்ததாக தயாரிப்பாளர் தங்கராஜ் கூறியுள்ளார்.

Advertisement