சன் மியூசிக்கில் பிரபலமான வி.ஜே வாக இருந்தவர் மணிமேகலை. பின்னர் இவர் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார். இதனை தொடர்ந்து பிரபல தொலைக்காட்சியில் தொகுப்பானியாகவும் அறிமுகம் ஆனார். பின் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியதன் மூலம் மணிமேகலை மக்களிடையே பிரபலமான தொகுப்பாளினியாக ஆனார். அதுமட்டும் இல்லாமல் இவருக்கென தனி ரசிகர் கூட்டமும் உள்ளது. மணிமேகலை அவர்கள் உசேன் என்பவரை காதலித்து வந்தார்.
மணிமேகலை பெற்றோர் மற்றும் சகோதரர்கள் இவர்களுடைய காதலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார்கள். பின் இவர்கள் வீட்டை விட்டு வெளியே வந்து திருமணம் செய்து கொண்டார்கள். ஹுஷைன், மணிமேகலை நண்பர்கள் மற்றும் உறவினர்கள் முன்னிலையில் இவர்கள் ரிஜிஸ்டர் மேரேஜ் செய்து கொண்டார்கள். மணிமேகலை திருமணத்திற்குப் பின்னும் தொடர்ந்து நிகழ்ச்சியில் தொகுப்பாளராக இருந்து வருகிறார்.
மேலும், இன்னும் தனது பெற்றோர்கள் தங்களை ஏற்றுக்கொள்ளாததால் கொஞ்சம் கவலையில் இருக்கிறார் மணிமேகலை.இடையில் கொஞ்சம் சின்னத்திரையில் பிரேக் எடுத்துக்கொண்ட மணிமேகலை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘மிஸ்டர் அண்ட் மிர்சஸ் சின்னத்திரை ‘ நிகழ்ச்சியில் பங்குபெற்றார். மேலும், சமீபத்தில் நிறைவடைந்த குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியிலும் பங்குபெற்றார்.
ஊரடங்கு உத்தரவுக்கு முன்பாகவே கிராமத்திற்க்கு சென்ற மணிமேகலை தற்போது ஊரடங்கு உத்தரவால் கிராமத்தில் ஜாலியாக இருந்துவந்தார் மணிமேகலை. சமீபத்தில் தான் ஹுசைன் தனது பிறந்தநாளை கொண்டாடினர். தற்போது மீண்டும் சென்னை திரும்பியுள்ளார். இந்த நிலையில் தனது கணவருக்கு ஐபோன் 11 போனை வாங்கி கொடுத்துள்ளார். இதற்கு நன்றி தெரிவித்து ஹுசைன் ஒரு பதிவை போட அதற்கு மணிமேகலை ‘சென்னை வந்ததும் பெரிய செலவு வச்சிட்ட இல்ல’ என்று பதிவிட்டுள்ளார்.