கணவருக்காக முஸ்லிமாக மாறிவிட்டாரா மணிமேகலை ? ரம்ஜான் நாளில் ரசிகருக்கு அவர் சொன்ன பதில்.

0
4858
manimegalai
- Advertisement -

முஸ்லீம் மக்களின் புனித பண்டிகையான ரம்சான் பண்டிகை நேற்று முதல் துவங்கியது.கேரளா, ஜம்மு காஷ்மீரில் மட்டும் புனித ரமலான் பண்டிகை நேற்று கொண்டாடப்பட்டது.அதே போல கொரோனா வைரஸ், லாக்டவுன் ஆகிய நெருக்கடிகளுக்கு மத்தியில் புனித ரமலான் நோன்பை சமூக விலகலுடன் கடைப்பிடித்த முஸ்லிம் மக்கள் நோன்பை முடித்தனர், மேலும், பல்வேறு பிரபலங்களும் அணைத்து முஸ்லீம் மக்களுக்கு ரம்ஜான் வாழ்த்தை தெரிவித்தனர்.

-விளம்பரம்-

மேலும், பிரபலங்கள் சிலரும் ரம்ஜான் பண்டிகையை வீட்டில் இருந்த படி தொழுதுவிட்டு மக்களுக்கு வாழ்த்தை தெரிவித்தனர். ஆனால், மணிமேகலை வீட்டில் ரம்ஜான் கொஞ்சம் ஸ்பெஷல் தான். அதற்கு காரணம் மணிமேகலையின் கணவர் ஹுசைன் இஸ்லாம் மதத்தை சேர்ந்தவர், மணிமேகலை பக்கா இந்து மதத்தை சேர்ந்தவர் என்பதால் தான். சன் மியூசிக்கில் பிரபலமான வி.ஜே வாக இருந்தவர் மணிமேகலை. பின்னர் இவர் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார்.

- Advertisement -

இதனை தொடர்ந்து பிரபல தொலைக்காட்சியில் தொகுப்பானியாகவும் அறிமுகம் ஆனார். பின் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியதன் மூலம் மணிமேகலை மக்களிடையே பிரபலமான தொகுப்பாளினியாக ஆனார். அதுமட்டும் இல்லாமல் இவருக்கென தனி ரசிகர் கூட்டமும் உள்ளது. மணிமேகலை அவர்கள் உசேனை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

மணிமேகலை பெற்றோர்கள் காதல் திருமணத்தை ஏற்றுக்கொள்ளாததால், தற்போது தனது கணவருடன் தனியாக வசித்து வருகிறார். மேலும், இந்த ஜோடிகள் செய்யும் சேட்டைகள் கொஞ்சம் நஞ்சம் இல்லை. சமீபத்தில் மணிமேகலை தனது கணவருக்கு ரம்ஜான் வாழ்த்தை தெரிவிக்கும் விதமாக புகைப்படம் ஒன்றை பதிவிட்டிருந்தார்.

-விளம்பரம்-

அந்த புகைப்படத்தை மணிமேகலையும் இஸ்லாம் பெண்ணை போல ஆடை அணிந்திருந்தார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர் ஒருவர் என்று கேள்வி கேட்டிருந்தார். இதற்கு பதில் அளித்த மணிமேகலை, பொங்கலுக்கு கோவிலுக்கும் போவோம் ரம்ஜானும் கொண்டாடுவோம் என்று பதில் அளித்துள்ளார்.

Advertisement