சூப்பர் சிங்கர் மளவிகாவிற்கு திருமணம் – வருங்கால கணவருடன் அவரே வெளியிட்ட புகைப்படம்.

0
16518
malavika
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் பல ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வெற்றிகரமாக போய் கொண்டு இருக்கும் நிகழ்ச்சி சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி. இது சீனியர், ஜூனியர் என்று மாறி மாறி ஒளிபரப்பு செய்து வருகிறார்கள். அதிலும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு என்றே ஒரு தனி ரசிகர் கூட்டம் உள்ளது. அதுமட்டும் இல்லாமல் சூப்பர் சிங்கர் பல சீசன்களை கடந்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. தற்போது சூப்பர் சிங்கர் சீசன் 8 படு கோலாகலமாக துவங்கி தற்போது பைனல் நோக்கி செல்கிறது.

-விளம்பரம்-

இந்நிலையில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் பிரபலமான மாளவிகா அவர்கள் கூடிய விரைவில் திருமணம் செய்து கொள்ள இருக்கிறார் என்ற தகவல் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் தான் மாளவிகா சுந்தர். தற்போது இவர் பாடலுக்கு என்று ஒரு தனி ரசிகர் கூட்டமே உள்ளது. இந்த நிகழ்ச்சியின் மூலம் இவருக்கு படங்களில் பட வாய்ப்பு வந்தது.

இதையும் பாருங்க : எப்படி இருக்கிறது யோகி பாபுவின் ‘பேய் மாமா’ – முழு விமர்சனம் இதோ.

- Advertisement -

அது மட்டும் இல்லாமல் இவர் தமிழ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டது போல் ஹிந்தியிலும் ஒரு பாடல் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பைனல் வரை சென்றார். ஆனால், மாளவிகா அதில் வெற்றி பெற முடியவில்லை. சமீபத்தில் கூட மாளவிகா அவர்கள் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மிகவும் தவறாக மெசேஜ் செய்த ஒருவரை பற்றி கூறி இருந்தார்.

இந்நிலையில் மாளவிகா அவர்கள் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சந்தோஷமான செய்தியை வெளியிட்டுள்ளார். அதில் மாளவிகா அவர்கள் கூடிய விரைவில் திருமணம் செய்ய இருப்பதாக
பதிவிட்டுள்ளார். மேலும், தனது வருங்கால கணவருடன் எடுத்த புகைப்படத்தையும் ஷேர் செய்து உள்ளார். தற்போது இந்த புகைப்படம் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. மாளவிகாவின் ரசிகர்கள் இவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

-விளம்பரம்-
Advertisement