பல் மருத்துவராக மாறிய சூப்பர் சிங்கர் ஜூனியர் 2 பிரபலம் – இவர பேர சொன்னா அந்த பாட்டு தான் ஞாபம் வரும்.

0
876
priyanka

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் பெரும் பிரபலமடைந்துள்ளது. ஜூனியர் சீனியர் என்று பல்வேறு சீசன்களாக ஒளிபரப்பாகி வரும் இந்த நிகழ்ச்சி மூலம் பல்வேறு நபர்கள் வெள்ளித்திரையில் அளித்து வருகின்றனர். திவாகர் தொடங்கி தற்போது செந்தில் கணேஷ் ராஜலட்சுமி வரை பல பெயரை சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி வெள்ளித்திரை வாய்ப்புகளை அமைத்துக் கொடுத்திருக்கிறது. அதிலும் சூப்பர் சிங்கர் ஜூனியருக்கு ரசிகர்கள் ஏராளம்.

இந்த சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் பல சிறுவர்கள் சினிமாவிலும் ஜொலித்து வருகின்றனர். சூப்பர் சிங்கர் ஜூனியர் மூலம் பிரபலமடைந்த பூவையர், தற்போது தமிழ் சினிமாவில் ஜூனியர் பாடகராக மட்டுமல்லாமல் நடிகராகவும் கலக்கி வருகின்றனர்.இந்த நிலையில் சூப்பர் சிங்கர் ஜூனியரில் பங்குபெற்ற பாடகி ஒருவர் தற்போது பல் மருத்துவராக அவதாரமெடுத்துள்ளார். அது வேறு யாரும் இல்ல பிரியங்கா தான்.

- Advertisement -

சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 2-ல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பிடித்தவர் பிரிங்கா. இந்த நிகழ்ச்சியின் முன்னணியில் வந்த அவர் இறுதிச்சுற்றுக்கு செல்லவில்லை என்றாலும், அவரது பாடல் மூலம் ரசிகர்கள் கூட்டத்தில் அதிகப்படுத்தியுள்ளார். அதிலும் இவர் ‘சின்ன சின்ன வண்ணக் குயில்’ பாடலை மட்டும் பல நூறு முறை பாடி இருப்பார். பிரியங்கா எந்த மேடை ஏறினாலும் ‘மன்னவன் பேரை சொல்லி’ என்று படாமல் இருந்தது கிடையாது. சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு பின்னர் தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களான இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான், இமான், ஜி.வி.பிரகாஷ் ஆகியோர் இசையிலும், மறைந்த பிரபல பாடகர் எஸ்.பி.பி.யுடன் மேடை நிகழ்ச்சியிலும் பாடியுள்ளார்.  

priyanka vijay tv singer Shop Clothing & Shoes Online

இப்படி ஒரு நிலையில் இவர் மருத்துவராக மாறி இருக்கிறார். கடந்த 2018-ம் ஆண்டு மருத்துவ படிப்பை முடித்தார் அதனைத் தொடர்ந்து மருத்துவமனை தொடங்க முயற்சித்த அவருக்கு கொரோனா தொற்று தடை போட்டது.ஆனால் தற்போது தனது மருத்து சேவையை தொடங்கியுள்ள பிரியங்கா, இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த பணிக்காக அவரது ரசிகர்கள் பலர் வாழ்த்து தெரிவித்து வருகினறனர்.

-விளம்பரம்-

Advertisement