பிரியங்கா- மணிமேகலை குறித்து சூப்பர் சிங்கர் பாடகி பூஜா வெங்கட் போட்டிருக்கும் பதிவு தான் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. கடந்த சில நாட்களாகவே மணிமேகலை- பிரியங்கா விவகாரம் தான் இணையத்தில் காட்டுத்தீயாய் வைரலாகி வருகிறது. விஜய் தொலைக்காட்சியில் குக் வித் கோமாளி 5 நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. தற்போது இந்த நிகழ்ச்சி இறுதி கட்டத்தை நெருங்கி வருகிறது. இப்படி இருக்கும் நிலையில் கடந்த வாரம் குக் வித் கோமாளி 5 நிகழ்ச்சியிலிருந்து திடீரென மணிமேகலை விலகியது ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.
இது தொடர்பாக மணிமேகலை போட்ட பதிவில், குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இனி நான் இல்லை. நான் ரொம்ப நேர்மையுடனும், அர்ப்பணிப்புடனும், எப்போதும் என்னுடைய 100% முயற்சியையும், கடின உழைப்பையும் கொடுத்தேன். 2019 இல் இருந்து குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருக்கிறேன். ஆனால், சுயமரியாதையை விட முக்கியமானது எதுவுமே கிடையாது. என்னுடைய வாழ்க்கையின் எல்லா நேரத்திலும் நான் அதை கண்டிப்பாக பின்பற்றி வருகிறேன். புகழ், பணம், தொழில் வாய்ப்புகள் எதுவாக இருந்தாலும் பரவாயில்லை. சுயமரியாதை என்று வரும்போது எல்லாமே இரண்டாம் பட்சம் தான்.
மணிமேகலை பதிவு:
அதனால் தான் நான் இந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து விலகிவிட்டேன். இந்த சீசனில் மற்றொரு பெண் தொகுப்பாளர் ஆதிக்கம் செலுத்துகிறார். குறிப்பாக, அவர் ஆங்கர் பார்ட்டில் எல்லாம் தலையிடுகிறார். அவர் நிகழ்ச்சியில் குக்காக இருக்க வேண்டும். ஆனால், அதை அவர் அடிக்கடி மறந்து விட்டு வேண்டுமென்றே என்னை வேலை செய்ய விடாமல் ஆங்கர் பகுதிகளில் நிறைய குறுக்கிடுகிறார். இது போன்று என்னை யாரும் நடத்தியது கிடையாது என்று எமோஷனலாக பதிவிட்டு இருந்தார். இப்படி இவர் சொன்னது தொகுப்பாளினி பிரியங்காவை தான் என்பது தெள்ள தெளிவாக தெரிகிறது.
பிரபலங்கள் கருத்து:
இதனால் பலரும் பிரியங்காவை விமர்சித்து திட்டியும் வருகிறது. மேலும், இந்த விவகாரம் தொடர்பாக பிரபலங்கள் பலருமே மணிமேகலைக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகிறார்கள். இந்நிலையில் சூப்பர் சிங்கர் பிரபலம் பூஜா வெங்கட் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், மற்றவரை வெறுக்காமல் ஒருவரை எப்படி நேசிப்பது என்று மக்கள் நினைக்கிறார்களா?. அடுத்தவர்களை கஷ்டப்படுத்தாமல் உங்களுக்கு பிடித்தவர்களை நீங்கள் ஆதரிக்கலாம்.
பூஜா வெங்கட் பதிவு:
மேலும், சமூகம் பெண்களை வீழ்த்துவதை முற்றிலும் விரும்புகிறது. உங்கள் கருத்துக்களை பொது மேடையில் சொல்வதற்கு முன், உங்கள் வார்த்தைகள் அவர்களையும் அவர்களது குடும்பத்தினரையும் எப்படி பாதிக்கும் என்பதை பற்றி சிந்தித்துப் பாருங்கள். அங்கு நடந்த பிரச்சினை என்னவென்று நம் யாருக்கும் தெரியாது. நான் உங்களை இவர்களுக்கு சப்போர்ட் செய்யுங்கள் என்று சொல்லவில்லை. ஆனால் ஒரு பிரச்சனை குறித்து ஒழுங்காக தெரியாமல் அதில் நாம் யாரும் கருத்து சொல்லக்கூடாது. ஒரு சில மணி நேரங்கள் தொலைக்காட்சியில் பார்ப்பதன் மூலம் நீங்கள் யாரையும் தெரிந்து கொள்ள முடியாது.
வெறுப்பை கொட்டாதீர்கள்:
சோசியல் மீடியா மிகவும் வலிமையானது. அதில் நமது எண்ணங்களை சொல்வதில் நாம் கவனம் கொள்ள வேண்டும். எல்லோரிடமும் அன்பாக இருக்க கற்றுக் கொள்ளுங்கள். யாரிடமும் வெறுப்பை காட்டாதீர்கள். ஒருவருக்கு தனது தனிப்பட்ட வாழ்க்கையை சமாளிப்பதற்க்கே நிறைய வலிமை வேண்டும். ஒருவரின் கஷ்டத்திற்கு நீங்கள் ஆளாக வேண்டாம். உங்களால் முடிந்தவரை எல்லாருக்கும் அன்பை கொடுங்கள் என்று பதிவிட்டுள்ளார். சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் இருந்து பிரியங்கா மற்றும் பூஜா நன்றாக பழகி வருகிறார்கள் என்பது அனைவரும் அறிந்ததே. தற்போது பூஜாவின் இந்த பதிவு பிரியங்காவிற்கு ஆதரவா? என கேள்விகளை எழுப்பிள்ளது.