விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பல ரியாலிட்டி ஷோக்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு வருகின்றன. அந்த வகையில் விஜய் டிவியில் வரும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி பட்டி தொட்டி எல்லாம் ஃபேமஸ் என்று சொல்லலாம். இந்த நிகழ்ச்சி ஜூனியர், சீனியர் என்று பல ஆண்டுகளாக விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது. மேலும், இந்த நிகழ்ச்சிக்கு என்றே ஒரு தனி ரசிகர் கூட்டம் உள்ளது. அதுமட்டுமில்லாமல் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பல பேர் சினிமா உலகில் கலக்கிக் கொண்டிருக்கிறார்கள். அந்த வகையில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் தான் ரோஷினி. இவர் சினிமாவில் பிரபலமான பின்னணி பாடகி ஆவார்.
இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளில் பின்னணி பாடகியாக திகழ்ந்து வருகிறார். பின் திருமணத்திற்கு பிறகு இவர் பாடுவதில் இருந்து கொஞ்சம் பிரேக் எடுத்துக் கொண்டார். பின் விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் சீசன் 7 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்குபெற்றார். இதன் மூலம் இவர் மீண்டும் சினிமா உலகில் பாடத் தொடங்கினார். மேலும், இவர் தனது சகோதரி உடன் இணைந்து 37 மணி நேரம் இடைவிடாமல் பாடல்கள் பாடி உலக சாதனை படைத்துள்ளார். இவருடைய சாதனை கின்னஸ் உலக சாதனையில் இடம் பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது இவர் சினிமாவில் இண்டஸ்ட்ரியில் செம பிஸி என்று சொல்லலாம். அது மட்டுமில்லாமல் சிம்பு நடித்த ஈஸ்வரன் படத்தில் இவர் பாடிய மாங்கலியம் என்ற பாடல் சோசியல் மீடியா முழுவதும் செம வைரலானது. தற்போது இவர் தன் கணவருடன் இணைந்து விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கிறார். இந்த நிகழ்ச்சியில் இவர்கள் இருவரும் செய்யும் லூட்டி வேற லெவல்.
இந்நிலையில் ரோஷினி அவர்கள் தன் கணவருடன் இணைந்து தன்னுடைய செல்ல மகளின் பிறந்தநாளை கொண்டாடி இருக்கிறார். இவர் தன் மகளின் புகைப்படத்தை சோசியல் மீடியாவில் பகிர்ந்துள்ளார். இதைப்பார்த்த நெட்டிசன்கள் பலரும் ரோஷினிக்கு இவ்வளவு பெரிய மகளா! என்று கமென்ட் போட்டு வருகிறார்கள்.