சூப்பர் சிங்கர் நடுவர் ஷங்கர் மகாதேவனுக்கு இவ்ளோ பெரிய மகன்களா ? அவரின் மனைவி யார் தெரியுமா ?

0
866
Shankar
- Advertisement -

சூப்பர் சிங்கர் நடுவர் சங்கர் மகாதேவனின் குடும்ப புகைப்படம் தற்போது சோசியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது. இந்திய சினிமா உலகில் மிகப்பிரபலமான பின்னணி பாடகராக திகழ்பவர் சங்கர் மகாதேவன். இவர் பின்னணி பாடகர் மட்டுமில்லாமல் பாப் இசை கலைஞர் மற்றும் இசையமைப்பாளர் ஆவார். இவர் தமிழ் மற்றும் இந்தியில் பல பாடல்களை பாடி இருக்கிறார். இவர் இந்தியத் திரைப்படங்களுக்கு இசையமைக்கும் ஷங்கர்-எஹ்சான்-லாய் என்னும் மூவர் குழுவின் ஒரு பகுதியாக இருக்கிறார்.

-விளம்பரம்-

ஷங்கர் மகாதேவன் செம்பூர் மும்பையில் ஓர் தமிழ் பேசும் கேரளப் பிராமணக் குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர். மேலும், இவர் இளமையிலேயே கர்நாடக இசை மற்றும் இந்துஸ்தானி இசையில் பயிற்சி பெற்றவர். அதோடு தன்னுடைய 5 வயதிலேயே வீணை வாசிக்கும் திறமை பெற்றிருந்தவர் ஷங்கர் மகாதேவன். அதுமட்டும் இல்லாமல் காலே காகா என்றழைக்கப்பட்ட சீனிவாச காலேயிடம் இசை பயின்று இருந்தார்.

இதையும் பாருங்க : Rolex கதாபாத்திரத்தில் சம்பளமின்றி நடித்த சூர்யாவிற்கு Rolex வாட்ச்சை பரிசியாக அளித்த கமல் – என்ன மாடல் ? எவ்வளவு விலை தெரியுமா ?

- Advertisement -

சங்கர் மகாதேவன் இசை தொடக்கம்:

அப்படியே இவர் தன்னுடைய படிப்பிலும் கவனம் செலுத்தி இருந்தார். மேலும், ஷங்கர் மகாதேவன் கல்லூரிப் படிப்பின் போது இசையிலும் தேர்ச்சி பெற்றிருந்தார். அதற்கு பின் இவர் தன்னுடைய இசைப் பயணத்தைத் தொடங்கியிருந்தார். 1998 ஆம் ஆண்டில் தன்னுடைய இசை பயணத்தைத் தொடங்கி தற்போது வரை இவர் இசையில் பயணித்துக் கொண்டிருக்கின்றனர். இவருடைய இசைக்கு என்றே ஒரு தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது.

சங்கர் மகாதேவன் இசை பயணம்:

மேலும், இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் இந்தி, மலையாளம், கன்னடம், தெலுங்கு, மராத்தி என பல மொழி படங்களிலும் பாடியிருக்கிறார். அதோடு இவர் இசைக்காக தேசிய விருது கூட பெற்றிருக்கிறார். விஜய் டிவியில் பல வருடங்களாக வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியிலும் இவர் நடுவராக பங்கு பெற்று வருகிறார். இந்த நிகழ்ச்சியின் மூலம் இவர் மக்கள் மத்தியில் படு பேமஸ் ஆனார் என்றே சொல்லலாம்.

-விளம்பரம்-

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் சங்கர் மகாதேவன்:

தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 8 நிகழ்ச்சியில் சங்கர் மகாதேவன் நடுவராக இருக்கிறார். இவருடன் கே எஸ் சித்ரா, கல்பனா, எஸ்பிபி சரண் ஆகியோர் நடுவர்களாக இருக்கிறார்கள். இது தவிர இவர் திரைப்படங்களிலும் பாடிக் கொண்டு வருகிறார். இந்த நிலையில் இவருடைய குடும்ப புகைப்படம் ஒன்று சோசியல் மீடியாவில் வெளியாகி உள்ளது. அதில் சங்கர் மகாதேவன் தன்னுடைய மனைவி மற்றும் இரண்டு மகன்களுடன் இருக்கும் புகைப்படம்.

சங்கர் மகாதேவன் குடும்ப புகைப்படம்:

இவருடைய மனைவியின் பெயர் சங்கீதா மகாதேவன், மகன்கள்- சித்தார்த் மகாதேவன், சிவம் மகாதேவன். இந்த புகைப்படம் தான் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இதை பார்த்த பலரும் சங்கர் மகாதேவனுக்கு இவ்வளவு அழகிய மனைவி மற்றும் மகன்களா! மகன் பார்ப்பதற்கு அப்படியே ஹீரோ போல் இருக்கிறார் என்றெல்லாம் கமெண்ட் போட்டு புகைப்படத்தை பயங்கர ட்ரெண்டிங் ஆக்கி வருகிறார்கள்.

Advertisement