Rolex கதாபாத்திரத்தில் சம்பளமின்றி நடித்த சூர்யாவிற்கு Rolex வாட்ச்சை பரிசியாக அளித்த கமல் – என்ன மாடல் ? எவ்வளவு விலை தெரியுமா ?

0
2147
surya
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான இயக்குனராக திகழ்ந்து கொண்டு இருப்பவர் லோகேஷ் கனகராஜ். இவர் இயக்கிய மாநகரம், கைதி, மாஸ்டர் போன்ற படங்கள் எல்லாம் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்து இருக்கிறது. தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடிப்பில் வெளிவந்து இருக்கும் படம் விக்ரம். இந்த படத்தை கமலின் ராஜ்கமல் இண்டர்நேஷனல் நிறுவனம் உடன் இணைந்து உதயநிதி ஸ்டாலின் தயாரித்து இருக்கிறது. இந்த படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில், காளிதாஸ் ஜெயராம், ஷிவானி, மைனா நந்தினி உட்பட பல நடிகர்கள் நடித்து இருக்கிறார்கள். இந்த படத்தைப் பொருத்தவரை ஒரு பழிவாங்கல் கதை என்றாலும் இயக்குனர் அதை சொல்லிய விதமும், படமாக்கிய விதமும் பாராட்டுகளை குவித்து இருக்கிறது.

-விளம்பரம்-

படத்தில் கமலின் மகனாக காளிதாஸ் நடித்திருக்கிறார். போதை பொருள் கடத்தல் கும்பலால் கமலின் மகன் கொல்லப்படுகிறான். இதை அறிந்த கமல் தன் மகனைக் கொன்றவர்களைத் பழிவாங்க நினைக்கிறார். பின் அடுத்தடுத்து நடக்கும் சுவாரஸ்யமே படத்தின் கதை. மேலும், அனைவரும் எதிர்பார்த்திருந்த கமலின் விக்ரம் படம் நான்கு ஆண்டுகளுக்கு பின் வெளிவந்து இருப்பதால் ரசிகர்கள் திரையரங்கில் கொண்டாடி வருகிறார்கள். படத்தின் திரைக்கதையில் உள்ள வேகமும், விறுவிறுப்பும் பார்வையாளர்களை பார்க்க தூண்டுகிறது.

- Advertisement -

மிரட்டிய சூர்யா :

ஒவ்வொரு காட்சியிலும் கமலும், லோகேஷ் கனகராஜூம் மெனக்கெட்டு மாஸ் காட்டி இருக்கிறார்கள். விக்ரம் திரைப்படம் அனைத்து தரப்பு ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் மாஸாக இருக்கிறது. அதோடு விக்ரம் படம் வெளிவந்து எல்லா இடங்களிலும் முதல் நாளே நல்ல வசூல் வேட்டை நடத்தி இருப்பதாக கூறப்படுகிறது. பிரபலங்கள் பலரும் விக்ரம் படத்தை பார்த்து பாராட்டி வருகின்றனர். மேலும், விக்ரம் படம் வெளியானதிலிருந்து அனைவர் மத்தியிலும் சூர்யாவின் கதாபாத்திரம் குறித்து அதிகமாக பேசப்பட்டு வருகிறது. படத்தின் கடைசி நிமிடத்தில் சூர்யா வந்திருந்தாலும் மிரட்டி சென்றிருக்கிறார்.

விக்ரம் படம் குறித்து சூர்யா டீவ்ட்:

இது நாள் வரை படத்தில் தன்னுடைய கதாபாத்திரம் குறித்து வாய் திறக்காமல் இருந்த சூர்யா தற்போது முதன்முறையாக விக்ரம் படம் குறித்து ட்வீட் ஒன்று போட்டிருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பது, அன்புள்ள கமலஹாசன் அண்ணா. விக்ரம் படத்தில் உங்களுடன் நடித்ததன் மூலம் என் கனவு நிறைவேறி உள்ளது. இதை உருவாக்கி கொடுத்த இயக்குனர் லோகேஷ் கனகராஜுக்கு நன்றி என்று பதிவிட்டிருந்தார்.

-விளம்பரம்-

Rolex வாட்ச்சை பரிசாக கொடுத்த கமல் :

விக்ரம் படத்தில் ஏற்கனவே கைதி படத்தில் வந்த கார்த்தியின் குரல் மட்டும் கேட்கப்பட்டது. விக்ரம் படத்தின் கிளைமாக்ஸ்சிலும் விக்ரம் 2 தொடர்ச்சிக்க்கான அடித்தளத்துடன் தான் முடித்தனர். எனவே, விக்ரம் 2 உருவானால் அதில் கார்த்தயும் இடம்பெறுவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்படி ஒரு நிலையில் சூர்யாவிற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக சூர்யாவிற்கு Rolex கை கடிகாரம் ஒன்றை பரிசாக வழங்கி இருக்கிறார் கமல். Rolex Day – Date Wrist Watch 128238A K18 என்ற அந்த மாடல் வாச்சின் விலை 54902 அமெரிக்க டாலர் ஆகும். இந்திய மதிப்பில் அதன் விலை 4266612.85 ரூபாய் ஆகும்.

விக்ரம் 3யில் சூர்யா :

ஏற்கனவே விக்ரம் வெற்றி குறித்து நன்றி தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்ட கமல் ‘கடைசி மூன்று நிமிடமே வந்து திரையரங்குகளை அதிர வைத்த என் அருமை தம்பி சூர்யா அவர்கள் அன்பிற்காக மட்டுமே விக்ரம் படத்தில் நடித்தார். அவருக்கு நன்றி சொல்லும் படலத்தை அடுத்து நாங்கள் இணையும் படத்தில் முழுவதுமாய் காட்டிவிடலாம் என்று இருக்கிறேன் ” எனக் குறிப்பிட்டுள்ளார். கமல்ஹாசன் நன்றி தெரிவித்து வெளியிட்டிருக்கும் இந்த வீடியோ ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.’

Advertisement