தலைவர் 169 படத்தின் கதை இது தானா? என்னப்பா இது மீண்டும் அதே மாதிரி போகுது நெல்சன்.

0
565
Rajini169
- Advertisement -

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் தலைவர் 169 படத்தின் கதை குறித்த தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகி உள்ளது. உலகம் முழுவதும் மிக பிரபலமான நடிகராக திகழ்ந்து ரஜினிகாந்த் கொண்டிருக்கிறார். 80 காலகட்டம் தொடங்கி தற்போது வரை இவர் எண்ணற்ற படங்களில் நடித்து இருக்கிறார். மேலும், இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், வசூலையும் பெற்றிருக்கிறது. அதோடு இவருக்கு தமிழகத்தில் மட்டுமில்லாமல் உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளார்கள். சமீபத்தில் இவருடைய நடிப்பில் வெளிவந்த அண்ணாத்த படம் மக்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று இருந்தாலும் வசூலில் கோடிகளை குவித்து இருக்கிறது.

-விளம்பரம்-
rajini

குடும்ப உறவுகளின் முக்கியத்துவத்தையும், குடும்ப பாசத்தையும் மையமாக வைத்து இந்த படம் உருவாகி இருந்தது. இந்த படத்தில் குஷ்பூ, மீனா, கீர்த்தி சுரேஷ், சூரி உட்பட பல நடிகர்கள் நடித்து இருந்தார்கள். இந்த படத்தை தொடர்ந்து ரஜினிகாந்த் அவர்கள் தலைவர் 169 என்ற படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தில் நெல்சனும், ரஜினிகாந்தும் இணைந்து பண்ணுகிறார்கள். தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான இயக்குனராக நெல்சன் திகழ்ந்து கொண்டிருக்கிறார். இவர் நயன்தாராவை வைத்து கோலமாவு கோகிலா என்ற படத்தை இயக்கியதன் மூலம் தான் தமிழ் சினிமா உலகிற்கு இயக்குனராக அறிமுகமானார்.

- Advertisement -

நெல்சனின் திரைப்பயணம்:

அதனைத் தொடர்ந்து சமீபத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த டாக்டர் படத்தை நெல்சன் இயக்கி இருந்தார். இந்த படமும் மிகப்பெரிய அளவில் வெற்றி அடைந்தது. இதனைத் தொடர்ந்து இவர் மூன்றாவது படமாக நெல்சன் அவர்கள் விஜய்யை வைத்து பீஸ்ட் என்ற படத்தை இயக்கி இருக்கிறார். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து இருக்கிறது. இந்த படத்தில் செல்வராகவன், பூஜா ஹெக்டே, விடிவி கணேஷ் உட்பட பல நடிகர்கள் நடித்து உள்ளார்கள். தற்போது இந்த படத்தின் இறுதி கட்ட பணிகள் மும்முரமாக நடந்து கொண்டிருக்கின்றது.

பீஸ்ட் படத்தின் ட்ரைலர்:

இந்த படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளியாகி இருக்கிறது. இந்த படத்தில் விஜய் ‘வீர ராகவன்’ என்ற பெயரில் நடித்து இருக்கிறார். ட்ரெய்லரில் ஒரு மால்லை பயங்கரமான தீவிரவாதிகள் ஹைஜாக் பண்ணுகிறார்கள். கடத்தல் பாணியில் கதை செல்கிறது. மேலும், பீஸ்ட் படம் வருகிற ஏப்ரல் 13 ஆம் தேதி உலகமெங்கும் திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து இவர் ரஜினியை வைத்து படம் பண்ணுகிறார். மேலும், நெல்சன்- சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்-அனிரூத் கூட்டணியில் உருவாகும் படத்திற்கு ‘தலைவர் 169’ என்று பெயரிடப்பட்டு உள்ளது.

-விளம்பரம்-
Nelsons Philosophy Directing Big Hero | நெல்சன்

தலைவர் 169 படத்தின் கதை:

இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனமே தயாரிக்கிறது. இதற்கான வீடியோ ஒன்றையும் அதிகாரபூர்வமாக அறிவித்து இருந்தார்கள். வீடியோவில் ரஜினி, நெல்சன் மற்றும் அனிரூத் மூவரும் செம்ம மாஸாக இருந்தார்கள். இந்த வீடியோ ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. மேலும், இந்த படத்தில் நடிக்கும் பிற நடிகர் பற்றிய தகவல் கூடிய விரைவில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் தலைவர் 169 படம் குறித்த தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகியுள்ளது. அதுஎன்னவென்றால், தலைவர் 169 திரைப்படமும் ஒரு கடத்தல் கதை தான் என்று கூறப்படுகிறது.

டாக்டர் நாயகி பிரியங்கா மோகன் | Doctor Priyanka Arul Mohan

தலைவர் 169 படம் குறித்த தகவல்:

சூப்பர் ஸ்டார் ரஜினியின் மகளாக பிரியங்கா அருள்மோகன் நடிக்க இருக்கிறார். தன் மகளை கடத்திய தீவிரவாத கும்பலை ரஜினிகாந்த் கண்டுபிடிப்பது தான் கதையாக இருக்கும் என்று கூறப்பட்டு வருகிறது. ஆகவே நெல்சனின் டார்க் காமெடி கடத்தல் கதை தான் தலைவர் 169 படத்திலும் தொடரும் என்று சொல்லப்படுகிறது. அதுமட்டும் இல்லாமல் இந்த படத்திலும் யோகிபாபு, ரெடின்கிங்ஸ்லி ஆகியோர் வருவார்களா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். ஆனால், இன்னும் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.

Advertisement