கண்டக்டராக இருந்த போது ரஜினிக்கு ஏற்பட்ட முதல் காதல். ரகசியத்தை சொன்ன பாட்ஷா நடிகர்.

0
12475
rajini-first-love

தென்னிந்திய சினிமா திரை உலகில் சூப்பர் ஸ்டாராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் ரஜினிகாந்த். மேலும், சினிமா திரையுலகில் அவர் ஆற்றிய சாதனைகளும், படைப்புகளும் எண்ணிலடங்காதவை. ரஜினிகாந்த் அவர்கள் சினிமா துறையில் மட்டும் இல்லாமல் தனிப்பட்ட வாழ்க்கையிலும் நிறைய புது விஷயங்களை செய்துள்ளார். ரஜினிகாந்த் ஒரு ரியல் ஹீரோ என்பது எல்லோருக்குமே தெரியும். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த பிரபல நடிகை லதாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்கு பின்னர் இவர்களுக்கு ஐஸ்வர்யா, சௌந்தர்யா என்று இரண்டு மகளும் பிறந்தார்கள். அதே போல சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த இத்தனை வருட திரை வாழக்கையில் எந்த ஒரு பெண் சர்ச்சையிலும் சிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆனால், அவருக்கும் ஒரு ரொமாண்டிக் சைடு இருப்பது சமீபத்தில் தான் தெரிய வந்தது.

Image result for rajini  conductor"

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தமிழில் பல்வேறு ஹிட் படங்களில் நடித்துள்ளர். ஆனால், பல ஆண்டுகளுக்கு முன்னால் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த ‘பாட்ஷா’ படம் வேற லெவல் தெரிக்கவிட்டது. இந்த படத்தில்ரஜினி ஒரு டான் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.மேலும் ரஜினியின் திரையுல வாழ்க்கையில் அந்த படம் மிகவும் மறக்க முடியாத ஒன்று. மேலும், அந்த படத்தில் வில்லனாக நடித்தவர் தேவன். அந்த படத்தில் இவர் நக்மாவின் தந்தையாக நடித்திருந்தார். அதோடு மும்பையில் நடந்த டின்னர் பார்ட்டியில் ரஜினி, ஜனகராஜ் மற்றும் விஜயகுமார் அவர்களை அழைத்திருந்தார்.

- Advertisement -

மேலும், அங்கு நான்கு பேரும் தங்களுடைய பழைய கால வாழ்க்கையைப் பற்றி பேசிக் கொண்டுஇருந்துள்ளனர் . இதில் ரஜினி தன்னுடைய பஸ்ட் லவ்வர் பற்றி பேசினார். அதில் ரஜினி கூறியது, நானும் தேவனும் பெங்களூரில் கண்டக்டராக வேலை செய்து வந்தோம். அப்ப மெடிக்கல் காலேஜில் படித்து கொண்டிருந்தவர் தான் நிர்மலா. பஸ்ஸில் போகும் போது, வரும் போது எங்களுக்கு சந்திப்பு ஏற்பட்டது. அதோடு எங்களது முதல் சந்திப்பு சண்டையில் தொடங்கியது. பின்னால் அவங்களையே காதலிக்க தொடங்கினேன். மேலும், நிர்மலா என்ன நிறைய என்கரேஜ் பண்ணுவாங்க. அவங்க சொல்லி தான் நான் சென்னைக்கு வந்தேன்.

Image result for actor devan batsha"

மேலும், வரும்போது என்கிட்ட ஐநூறு ரூபாய் கொடுத்துட்டு எங்கிரேஜ் பண்ணி உன்னால முடியும் சென்னைக்கு போய் கலக்கு என்று சொன்னார்கள். நானும் என்னுடைய சினிமா வாழ்க்கை பயணத்தை தொடங்கினேன். பின்னர் நான் பல படங்களில் நடித்து சூப்பர் ஹிட் படங்கள் ஆனது. ஆனால், பிறகு நான் பெங்களூர் வந்து நிர்மலாவை தேடினேன். ஆனா அவங்க அங்க இல்ல கல்யாணம் பண்ணிட்டு அவங்க சொந்த ஊருக்கு போய்ட்டாங்க. அப்ப நான் ரொம்ப கஷ்டப்பட்டு என் மனசு உடைஞ்சு ரொம்ப அழுதுட்டு வந்துட்டேன். எப்டியாவது அவங்கள பார்த்து பேசனும் என்று யோசித்து பல நாட்கள் தேடியும் கிடைக்கல. திரும்பி நான் சென்னை வந்து விட்டேன். ஆனால், என்னுடைய பஸ்ட் லவே இன்னைக்கு என்னால மறக்க முடியாது என்றும் மேலும், தர்பார் படத்தின் மூலம் எனக்கு இந்த உணர்வுகள் என் மனதில் மீண்டும் ஏற்படுத்தியது என்று கூறியுள்ளார். சூப்பர் ஸ்டாருக்கு இப்படி ஒரு காதல் கதை இருக்கிறது என்பதே நடிகர் தேவன் சொல்லித்தான் இத்தனை ஆண்டுகள் கழித்து தெரியவந்துள்ளது.

-விளம்பரம்-
Advertisement