பொதுவாக சினிமாவில் ஒரு சில வில்லன் நடிகர்கள் மட்டுமே ரசிகர்களால் பெரிதும் கவனிக்கப் படுவது இல்லை. இருப்பினும் ஒரு சில வில்லன் நடிகர்கள் சில படங்களில் நடித்திருந்தாலும் ரசிகர்களின் மனதில் நீங்கா இடத்தைப் பிடித்து விடுவார்கள். அந்த வகையில் வில்லன் நடிகரான தீனா தனது வில்லத்தனமான நடிப்பால் பல ரசிகர்களை கொண்டுள்ளார். கமல் நடித்த விருமாண்டி படத்தில் ஜெயில் வார்டனாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் தீனா.
முதல் படமே கமல் படம் என்பதால் இவர் நடித்த பெரும்பாலான படங்களில் இவரது வில்லத்தனத்தையும் தாண்டி இவரது நடிப்பும் வெகுவாக பாராட்டபட்டது. விருமாண்டி படத்திற்கு பின்னர் தமிழில் வெளியான பல படங்களில் வில்லனாக நடித்துள்ளார். இதுவரை ஜில் ஜங் ஜக், தெறி போன்ற பல படங்களில் நடித்துள்ளார் தீனா. மேலும், தனுஷ் நடிப்பில் வெளியான ‘வட சென்னை’ படத்திலும் ஒரு முக்கிய வில்லனாக நடித்திருந்தார். அந்த படத்தில் இவரது நடிப்பு பெரிதும் பாராட்டபட்டது.
இதையும் பாருங்க : நீங்களுமா ? முல்லையின் அந்தரத்தில் தொங்கியபடி யோகா போஸை கண்டு புலம்பும் ரசிகர்கள்.
சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற தீனா பேசுகையில், நான் பல்வேறு பேட்டிகளில் பங்கேற்ற போது பல்வேறு பிரச்சனைகள் குறித்து கேள்விகள் கேட்பார்கள். அதற்கு நான் உண்மையாக பதில் சொன்னால். அப்படி எல்லாம் வேணாம் சார், இதை எல்லாம் ஒளிபரப்பினால் பிரச்சனை வரும் என்கிறார்கள். பின்னர் எதற்காக என்னை பேட்டி எடுக்கிறார்கள் மற்ற ஹீரோக்களை பற்றி பெருமையாக பேசவா ? அதற்கு நான் ஏன் பேட்டி கொடுக்க வேண்டும்.
இரண்டாவதாக எல்லா பேட்டிகளிலும் கேட்ட கேள்வியை தான் கேட்கிறார்கள். இப்போ நான் விஜய் அண்ணன் கூட நடித்தால் அவர் பற்றியே கேட்கிறார்கள். அதன் நான் ஏற்கனவே சொல்லி விட்டேனே ‘அவர் அற்புதான நபர்’ அதற்கு மேல் நான் என்ன பேச வேண்டும். இதையே தான் திரும்ப திரும்ப கேட்கிறார்கள் என்று கடுப்பாக கூறியுள்ளார் தீனா. நடிகர் தீனா ஏற்கனவே அஜித் மற்றும் விஜய் குறித்தெல்லாம் பல பேட்டிகளில் புகழ்ந்து பேசி இருக்கிறார் என்பது குறிபிடத்தக்கது.