அன்றும் இன்றும் என்றும் தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டாராக கலக்கிக் கொண்டிருப்பவர் ரஜினிகாந்த். இவருடைய நடிப்பில் வரும் படத்தை பார்ப்பதற்கென்றே ஒரு தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. மேலும், இவருடைய படம் திரையரங்குகளில் வெளியாகிறது என்றாலே போதும் ரசிகர்களின் கூட்டம் அலைமோதும். சமீப காலமாகவே ரஜினி நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மேலும், தமிழ் சினிமா உலகில் தனக்கென ஒரு முத்திரையை ரஜினி பதித்துள்ளார். தற்போது ரஜினிகாந்த் அவர்கள் சிவா இயக்கத்தில் அண்ணாத்த என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் குஷ்பு, நயன்தாரா, மீனா, கீர்த்தி சுரேஷ் உட்பட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளார்கள்.
இந்த படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திரையரங்கில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் சுமாரான விமர்சனத்தை பெற்று வருகிறது. அண்ணாத்த படத்தைத் தொடர்ந்து ரஜினி அவர்கள் வெற்றிமாறன், லோகேஷ் கனகராஜ் ஆகிய இரண்டு இயக்குனர்களின் படங்களில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால், இதற்கான அதிகாரபூர்வமான தகவல் எதுவும் வெளியாகவில்லை. இந்நிலையில் ரஜினிகாந்த் அவர்கள் தன் மனைவி லதா உடன் இணைந்து படத்தில் நடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ரஜினி வாழ்க்கையில் எவ்வளவு பெரிய உயரத்திற்கு சென்றாலும் அதற்கு அவர் மனைவி லதாவும் ஒரு காரணம் என்று சொல்லலாம்.
நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த தில்லு முல்லு படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. இந்த பட சூட்டிங்கில் கல்லூரி பத்திரிகையாக ரஜினியை பேட்டி எடுக்க லதா வந்தார். அப்போது தான் முதன்முதலாக இருவரும் சந்தித்தார்கள். ரஜினி முதல் சந்திப்பிலேயே லதாவிடம் என்னை திருமணம் செய்து கொள்கிறாயா? என்று கேட்டுள்ளார். அதற்கு பிறகு இருவருக்கும் காதல் ஏற்பட்டு கல்யாணம் வரை சென்றது. இவர்களுக்கு இரண்டு பெண் பிள்ளைகள் இருக்கிறார்கள். திருமணத்துக்குப் பிறகு லதா அவர்கள் தன்னுடைய குடும்பத்தையும், கணவரையும், குழந்தைகளையும் பார்த்துக்கொள்வதே தன் கடமையாகக் கருதினார். பின் தன்னுடைய எல்லா வேலையையும் விட்டுவிட்டு குடும்பத்தை கவனித்து வந்தார். லதா அவர்கள் பாடகி என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான்.
இவர் பல ஆல்பங்களை வெளியிட்டுள்ளார். இந்நிலையில் இவர்கள் இருவரும் சேர்ந்து ஒரு திரைப்படத்தில் கூட நடித்துள்ளார்கள். மேலும், லதா, ரஜினி இருவரும் சேர்ந்து சரிதா என்ற திரைப்படத்தில் நடித்துள்ளனர். பிறகு சிவகுமார் நடிப்பில் வெளியான அக்னி சாட்சி என்ற திரைப்படத்தில் நடிகர் ரஜனிகாந்த் மற்றும் அவர் மனைவி லதா இருவரும் சேர்ந்து ஒரு காட்சியில் நடித்திருப்பார்கள். தற்போது அந்த படத்தில் உள்ள காட்சி புகைப்படம் சோஷியல் மீடியாவில் வெளியானதை தொடர்ந்து ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. மேலும், லதா அவர்கள் நடிகர் எம் ஜி ஆரின் படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.