சினிமாவை பொறுத்த வரை முன்னணி நடிகர் நடிகைகளை விட துணை கதாபாத்திரங்களில் நடிக்கும் நடிகர் நடிகைகள் தான் பல்வேறு படங்களில் தோன்றுகின்றனர். அந்த வகையில் தெய்வ திருமகள் படத்தில் எம் எஸ் பாஸ்கரின் மனைவியாக நடித்த சுரேகா வாணியும் ஒருவர். ஆந்திராவை பூர்வீகமாக கொண்ட இவர் தமிழில் உத்தமபுத்திரன் படத்தில் அறிமுகமானார்.
தெலுங்கில் 2005 ஆம் ஆண்டு முதல் பல்வேறு படங்களில் நடித்து வருகிறார். தமிழில் வெளியான உத்தம புத்திரன் படத்திற்கு பின்னர், ‘தெய்வதிருமள்’, ‘காதலில் சொதப்புவது எப்படி’, ‘ஜில்லா’, ’பிரம்மா’, ‘எதிர் நீச்சல்’, ‘மெர்சல்’, ‘விஸ்வாசம்’ உள்ளிட்ட பல தமிழ்ப் படங்களில் நடித்ததார். ஆனால், தமிழ் சினிமாவை விட அம்மணி தெலுங்கு சினிமாவில் தான் மிகவும் பிரபலம்.
தெலுங்கில் பிரபல நடிகையாக திகழ்ந்து வரும் இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் என்று பல்வேறு மொழிகளில் நடித்து வருகிறார். சினிமாவில் பெரும்பாலும் குடும்பப்பாங்கான வேடங்களில் மட்டுமே தோன்றும் இவர் நிஜ வாழ்வில் செம்ம மாடர்ன் பேர்வழியாக இருந்து வருகிறார். மேலும், இவருக்கு முடிந்து பள்ளி செல்லும் வயதில் இரண்டு பெண் குழந்தையும் இருக்கிறார்.
திருமணம் முடிந்து இரண்டு பிள்ளைகளுக்கு தாயக உள்ள சுரேகாவின் கணவர் சமீபத்தில் தான் காலமானார்.42 வயதை கடந்தாலும் அம்மணி படு கிளாமராக தனது சமூக வலைதள பக்கத்தில் புகைபடங்களை பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் இவர் நீட்சல் குளத்தில் இருக்கும் புகைப்படம் தற்போது வைரலாக பரவி வருகிறது.