தனது காதலியுடன் கருத்து வேறுபாட்டால் பிரபல வில்லன் நடிகரின் திருமணம் திடீர் ரத்து ?

0
1902

தாரை தப்பட்டை, மருது உள்ளிட்ட படங்களில் நடித்து நல்ல நடிகன் என்ற பெயரை பெற்றவர் நடிகர் ஆர்.கே சுரேஷ். இதற்கு முன்னர் இவர் படத் தயாரிப்பாளராகவும் இருந்து வந்தார். தற்போது பில்லா பாண்டி, தனி முகம், வர்கம் ஆகிய படங்களில் ஹீரோவாகவும் நடித்து வருகிறார்.
suresh

தற்போது 37 வயதான ஆர்.கே சுரேசுக்கு திருமண ஏற்பாடுகள் நடந்தன. சுமங்கலி சீரியல் நடிகை திவ்யாவிற்கும் ஆர்.கே சுரேசுக்கும் திருமணம் நடைபெறவுள்ளதாக கடந்த செப்டம்பர் 23ம் தேதி அறிவித்தார்.

இந்த நிலையில் இருவருக்கும் ஏதோ கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்துள்ளதாக தகவல் வந்துள்ளது. மேலும், நிச்சியம் செய்யப்பட்ட திருமணமும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக கூற்றப்படுகிறது.