தமிழ் சினிமாவுக்கு இப்படிபட்ட நடிகைகள் தேவையா? – அபர்ணதியை வெளுத்து வாங்கிய தயாரிப்பாளர்

0
409
- Advertisement -

‘நாற்கரப்போர்’ படத்தின் விழாவில் நடிகை அபர்ணதியை தயாரிப்பாளர் வெளுத்து வாங்கியிருக்கும் வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் வளர்ந்து வரும் நடிகையாக திகழ்ந்து கொண்டிருப்பவர் அபர்ணதி. இவர் மாடலிங் மூலம் தான் மீடியாவுக்குள் நுழைந்தார். பின் கடந்த 2018 ஆம் ஆண்டு கலர்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘எங்க வீட்டு மாப்பிள்ளை ‘ நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் பெரும் பிரபலமடைந்தவர் தான் அபர்ணதி.

-விளம்பரம்-

இந்த நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்த அபர்ணதிக்கு சினிமாவில் நடிக்கும் வாய்ப்பும் கிடைத்தது. அந்த வகையில் இவர் இயக்குனர் வசந்தபாலன் இயக்கத்தில் வெளிவந்த ‘ஜெயில்’ என்ற படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் ஜிவி பிரகாஷ் கதாநாயகனாக நடித்து இருந்தார். இந்த படத்தில் அபர்ணதியின் நடிப்பு பாராட்டைப் பெற்றிருந்தது. இதனை அடுத்து இவர் நடிப்பில் வெளியாகி இருந்த படம் ‘இறுக்கப்பற்று’. இந்த படத்தை இயக்குனர் யுவராஜ் இயக்கி இருந்தார். இந்த படத்தில் விக்ரம் பிரபு, ஷ்ரத்தா, அபர்ணதி, விதார்த், ஸ்ரீ, சானியா உட்பட பல நடிகர்கள் நடித்து இருந்தார்கள்.

- Advertisement -

நாற்கரப்போர் படம்:

இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. தற்போது அபர்ணதி அவர்கள் ஹீரோயினியாக நடித்திருக்கும் படம் நாற்கரப்போர். இந்த படத்தை அறிமுக இயக்குனர் ஸ்ரீ வெற்றி இயக்கியிருக்கிறார். இவர் இயக்குனர் எச்.வினோத்திடம் தான் உதவி இயக்குனராக பணியாற்றி இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தை சதுரங்க விளையாட்டை மையமாக வைத்து இயக்குனர் எடுத்திருக்கிறார். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக லிங்கேஷ் நடித்து இருக்கிறார். இந்நிலையில் நேற்று தான் சென்னையில் இந்த படத்தினுடைய ட்ரெய்லர் வெளியீட்டு விழா நடைபெற்றது.

விழாவில் தயாரிப்பாளர் சொன்னது:

இதில் படக்குழுவினர் கலந்து கொண்டிருந்தார்கள். ஆனால், படத்தின் நாயகி அபர்ணதி வரவில்லை. பின் விழாவில் சிறப்பு விருந்தினராக வந்த தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, சமீபகாலமாகவே தமிழ் சினிமாவில் நடிகைகள் படத்தின் புரமோஷனுக்கு வராது இருப்பது சாபக்கேடு ஆகிவிட்டது. இந்த படத்தின் புரோமோஷனுக்கு வர சொல்லி தயாரிப்பாளர் போன் பண்ணி அபர்ணதி இடம் கேட்டதற்கு நான், வரமாட்டேன். எனக்கு புரமோஷனுக்கு தனியாக காசு வேண்டும் என்றெல்லாம் கூறியிருக்கிறார். இந்த விஷயத்தை தயாரிப்பாளர் என்னிடம் சொன்னார்.

-விளம்பரம்-

அபர்ணதி குறித்து சொன்னது:

நானும் அவருக்கு போன் பண்ணி பேசினேன். அவர், வர முடியாது என்று சொல்லிவிட்டார். அதுமட்டுமில்லாமல் அவர் வேறு ரெண்டு மூணு கண்டிஷன்ஸ் போட்டார். மேடையில் அவர் யாருடன் உட்கார வேண்டும், யாரெல்லாம் இருக்கணும், தனக்கு சமமானவர்கள் தான் உட்கார வேண்டும் என்றெல்லாம் பேசி இருந்தார். இது என்னை ரொம்பவே கோபப்படுத்தி இருந்தது. இது தொடர்பாக நான் நடிகர் சங்கத்தில் புகார் கொடுப்பேன் என்று கூட சொன்னேன். அதற்கு அவர், நான் நடிகர் சங்கத்திலே இல்லை என்று சொல்லிவிட்டார்.

அபர்ணதி கண்டிஷன்:

கடைசியாக வருவீர்களா? மாட்டீர்களா? என்று கேட்டதற்கு 3 லட்சம் கொடுத்தால் தான் வருவேன் என்று சொன்னார். கடைசியில் நீங்கள் வரவே வேண்டாம் என்று சொல்லி போனை கட் பண்ணி விட்டேன். அதற்குப் பின் இரண்டு நாள் கழித்து எனக்கு போன் செய்து, சாரி சார் தெரியாமல் பேசிவிட்டேன், ஃபங்ஷனுக்கு வரேன் என்று சொன்னார். ஆனால், தற்போது போன் பண்ணி கேட்டால் வெளியூரில் இருக்கிறேன் என்று சொல்லிவிட்டார். அவர் வெளியூரிலேயே இருக்கட்டும். இது மாதிரி நடிகைகள் தமிழ் சினிமாவுக்கு தேவையே இல்லை. இதை மற்ற தயாரிப்பாளர்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் இந்த விஷயத்தை சொன்னேன் என்று கூறியிருக்கிறார்.

Advertisement