லோகேஷ் கனகராஜ் கையில் விருது – மேடையில் வாத்தி கம்மிங் ஸ்டெப் போட்ட ரைனா. இதோ வீடியோ.

0
15022
suresh
- Advertisement -

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ‘மாஸ்டர்’ திரைப்படம் கடந்த ஜனவரி 14 வெளியாகி இருந்தது. விஜய், விஜய் சேதுபதி, ஆண்ட்ரியா, மாளவிகா மோகனன், மாஸ்டர் மஹிந்தரன், சாந்தனு, அர்ஜுன் தாஸ், சஞ்சீவ், ஸ்ரீமன், ஸ்ரீநாத், கௌரி கிஷன் என்று பல்வேறு நட்சத்திர பட்டாளங்கள் நடித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார், சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த திரைப்படம் எப்போதோ வெளியாக இருந்த நிலையில் கொரோனா பிரச்சனை காரணமாக தள்ளிப்போயிக்கொண்டு இருந்த நிலையில் கடந்த ஜனவரி 14 ஆம் தேதி வெளியாகி இருந்தது.

-விளம்பரம்-

இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து இருந்தார். மேலும், இந்த படத்தில் இடம்பெற்ற பல்வேறு பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றிருந்தது. அதிலும் குறிப்பாக ‘வாத்தி கம்மிங்’ பாடல் படம் வெளியாவதற்கு முன்பாகவே யூடியூபில் நல்ல வரவேற்ப்பை பெற்று இருந்தது. அவ்வளவு ஏன் இந்த பாடலுக்கு தான் நடிகர் விஜய் இசை வெளியீட்டு விழாவின் போது மேடையில் நடனம் ஆடி இருந்தார். அதேபோல திரை அரங்கிலும் இந்த பாடலுக்கு ரசிகர்கள் உற்சாகம் அடைந்து இருந்தார்கள்.

இதையும் பாருங்க : திரௌபதி பெயரில் கர்ணன் படத்தில் மூன்றாம் பாடல் – மோகனை டேக் செய்து கலாய்க்கும் நெட்டிசன்கள்.

- Advertisement -

இந்த பாடல் யூடுயூப்பில் 70 மில்லியன் பார்வையாளராகளை கடந்து இருக்கும் நிலையில் ட்விட்டரில் #VaathiComing hesh tagகும் ட்ரெண்டிங்கில் வந்துள்ளது. இந்த பாடலுக்கும் பல்வேறு பிரபலங்கள் நடனமாடி வீடியோ வெளியிட்டிருந்தனர் வாத்தி கம்மிங் பாடலின் ட்ரேட் மார்க் ஸ்டெப்பை இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிக்கு இடையிலான போட்டியில் போட்டு அசத்தி இருந்தார் தமிழகத்தை சேர்ந்த இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வின்.

இப்படி ஒரு நிலையில் csk ரசிகர்களால் செல்லாமல் சின்னத் தல என்று அழைக்கப்படும் சுரேஷ் ரெய்னாவும் இந்த பாடலின் சிக்னேசர் ஸ்டெப்பை போட்டுள்ளார். சமீபத்தில் சுரேஷ் ரைனாவிற்கு பிரபல தனியார் மீடியா சார்பாக விருது வழங்கப்பட்டது. இதனை மாஸ்டர் பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் வழங்கி இருந்தார். அதன் பின்னர் மேடையில் வாத்தி கம்மிங் பாடல் ஒலிக்க அதற்கு சுரேஷ் ரெய்னா ஸ்டெப் போட்டுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement