திரௌபதி பெயரில் கர்ணன் படத்தில் மூன்றாம் பாடல் – மோகனை டேக் செய்து கலாய்க்கும் நெட்டிசன்கள்.

0
10761
mohan
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக பட்டைய கிளப்பி கொண்டு இருப்பவர் நடிகர் தனுஷ்.கடந்த ஆண்டு இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளி வந்த “அசுரன்” படம் அசுர வசூல் வேட்டையை ஆடியது. தற்போது ஜாகமே தந்திரம், கார்த்திக் நரேன் இயக்கத்தில் ஒரு படம் என்று படு பிசியாக நடித்து வரும் தனுஷ், பரியேறும் பெருமாள் மாரி செல்வராஜ் இயக்கத்தில் கர்ணன்’ படத்தில் நடித்து வருகிறார்.இந்த படத்தில் மலையாள நடிகை ரெஜிஷா விஜயன் தனுஷுக்கு ஜோடியாக நடிக்கிறார். இது தனுஷின் 41 வது படமாகும். இவர்களுடன் யோகி பாபு. மலையாள நடிகர் லால் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

-விளம்பரம்-
https://twitter.com/MydeenYasarAraf/status/1369253163354701824

கிரியேஷன்ஸ் சார்பில் கலைப்புலி எஸ் தாணு இந்த படத்தை தயாரிக்கிறார்.1991 ஆம் ஆண்டு கொடியன்குளம் மணியாச்சி ஜாதி கலவரத்தை மையமாக வைத்து தான் தனுஷ் நடிக்கும் கர்ணன் படம் உருவாக்கப்பட்டு வருகிறது என்று கூறப்படுகிறது. இந்த படத்திற்கு சந்தோஷ் சிவன் இசையமைத்து உள்ளார். கடந்த சில வாரங்களுக்கு முன்னர் இந்த படத்தில் இருந்து ‘கண்டா வரச் சொல்லுங்க’ பாடல் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது.

இதையும் பாருங்க : முல்லை கேரக்டர் இப்படி பண்ணலாமா ? புதிய முல்லையின் போட்டோ ஷூட்டால் அப்சட் ஆன ரசிகர்கள்.

- Advertisement -

இந்த பாடலை தொடர்ந்து . ‘ஏ ஆளு பண்டாரத்தி’ என்று துவங்கும் பாடல் சமீபத்தில் வெளியாகி இருந்தது. இந்த பாடலை தேவா பாடி இருந்தார். கண்டா வரச் சொல்லுங்க பாடலை போல இந்த பாடலுக்கும் நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில் கர்ணன் படத்தில் இருந்து மூன்றாவது பாடலுக்கான அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. இந்த பாடல் நாளை மறுநாள் அதாவது 11 ஆம் தேதி வெளியாக இருக்கிறது.

இந்த பாடலுக்கு திரௌபதி முத்தம் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த பாடலின் அறிவிப்பு வெளியானதில் இருந்து பலரும் ‘திரௌபதி’ இயக்குனர் மோனை டேக் செய்து கேலி செய்து வருகின்றனர். திரௌபதி படம் வெளியான போது, அது தலித் மக்களை குறிப்பிட்டு தாக்கி எடுத்தது போல இருந்தது என்று பல சர்ச்சைகள் எழுந்தது. தற்போது ‘திரௌபதி முத்தம்’ என்ற தலைப்பில் கர்ணன் பாடல் வெளியாக இருப்பதும் கொஞ்சம் பேசும் பொருளாக மாறியுள்ளது.

-விளம்பரம்-
Advertisement