கடந்த பிப்ரவரி 14 ஆம் தேதி காஸ்மீர் மாநிலம் புல்வாமா பகுதியில் இந்திய ராணுவத்தின் மீது பாகிஸ்தான் தீவிரவாதிகள் வெடிகுண்டு தாக்குதலை நடத்தினர். இந்த தாக்குதலில் இந்திய ராணுவ வீரர்கள் 40 பேர் வீர மரணம் அடைந்தனர். இதில் இரண்டு தமிழக வீரர்களும் அடக்கம். 

இதையடுத்து பாகிஸ்தானுக்கு வழங்கிய வர்த்தக ரீதியிலான அனுகூலமான நாடு என்ற அந்தஸ்தை இந்தியா திரும்ப பெற்றது. காஷ்மீர் தாக்குதலால் தன் நெஞ்சில் தீ எரிந்துகொண்டு இருப்பதாகவும், எதிரிகள் நிச்சயம் பெரிய விலை கொடுக்க வேண்டுமென்றும் பிரதமர் மோடி எச்சரிக்கை விடுத்திருந்தார். இந்நிலையில் புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் நடவடிக்கையில் இந்திய ராணுவம் ஈடுபட்டுள்ளது. பாகிஸ்தான் எல்லையொட்டிய பயங்கரவாதிகள் முகாம் மீது 1000 கிலோ அளவிலான குண்டுகளை இந்திய ராணுவம் வீசியுள்ளது.

Advertisement

இந்திய விமானப்படையின் மிராஜ் 2000 ரக போர் விமானங்கள் மூலம் இன்று அதிகாலை 3.30 மணியளவில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் பயங்கரவாதிகளின் முகாம் முற்றிலும் அழிக்கப்பட்டுள்ளதாக விமானப் படை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சமயத்தில் பாகிஸ்தான் முகாம்கள் தாக்கப்பட்ட வீடியோ என்று இணையத்தில் ஒரு வீடியோ வைரலாக பரவி வருகிறது.

இதனை பிரபல இந்தி பத்திரிகையாளரான விகாஸ் பதுரியா என்பவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். ஆனால், அவர் குறிப்பிட்டிருப்பது என்னவென்றால் இதுபோன்று தான் கண்டிப்பாக நடந்திருக்கும் என்று இந்தியில் குறிப்பிட்டுள்ளார். எனவே, இந்த வீடியோ உண்மையா பொய்யா என்று தெரியவில்லை.

Advertisement
Advertisement