நடிகை ஆக விருப்பம் இல்லை, இது தான் என் முதல் கனவு- சூர்யா பட நடிகை சொன்ன தகவல்

0
48
- Advertisement -

தன்னுடைய முதல் கனவு குறித்து பாலிவுட் நடிகை திஷா பதானி அளித்து இருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. பாலிவுட்டில் முன்னணி நடிகையாக திகழ்ந்து கொண்டிருப்பவர் திஷா பதானி. இவர் 2015ஆம் ஆண்டு தெலுங்கில் வெளிவந்த ‘லோஃபர் ‘ என்ற படத்தில் வருண் தேஜாவிற்கு ஜோடியாக நடித்து சினிமா உலகில் அறிமுமாகி இருந்தார். இந்த படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று இருந்தது.

-விளம்பரம்-

அதன் பின் இவர் 2016ஆம் ஆண்டு கிரிக்கெட் விளையாட்டு வீரர் எம் எஸ் தோனியின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடித்ததன் மூலம் பாலிவுட்டில் அறிமுகமாகி இருந்தார். இதில் இவர் எம்எஸ் தோனியின் முதல் காதலியாக நடித்து இருந்தார் என்பது குறிப்பிடதக்கது. அதனை தொடர்ந்து பாலிவுட்டில் இவர் பல படங்களில் நடித்திருக்கிறார். இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றிருக்கிறது.

- Advertisement -

திசா பதானி திரைப்பயணம்:

இப்படி இவர் ஹிந்தி,தெலுங்கு என பிற மொழி படங்களில் நடித்து வருகிறார். நேற்று நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ், கமல்ஹாசன், அமிதாப்பச்சன் நடிப்பில் ஃபேன் இந்தியா படமாக வெளியாகி இருந்த ‘கல்கி’ படத்தில் திஷா பதானி நடித்திருந்தார். இந்த படத்தை வைஜெயந்தி மூவிஸ் தயாரித்து இருக்கிறது. இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார்.

திஷா பதானி நடிக்கும் படங்கள்:

இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதை அடுத்து இவர் ‘வெல்கம் டு தி ஜங்கிள்’ என்ற ஒரு இந்தி படத்திலும் நடித்து வருகிறார். பின் இவர் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் ‘கங்குவா’ என்ற படத்தில் நடிக்கிறார். சூர்யா- சிறுத்தை சிவா கூட்டணியில் கங்குவா படம் உருவாகி வருகிறது. இந்த படத்தை யூவி கிரியேஷன் நிறுவனமும், ஸ்டுடியோ கிரீன் நிறுவனமும் இணைந்து தயாரித்து வருகிறது.

-விளம்பரம்-

திஷா பதானி பேட்டி:

இந்த படத்தின் மூலம் தான் திஷா பதானி தமிழ் சினிமா உலகில் அறிமுகமாக இருக்கிறார். இதை அடுத்தும் இவர் சில படங்களில் கமிட்டாகி இருக்கிறார். இந்த நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டியில் திஷா பதானி, எனக்கு தென்னிந்திய படங்கள், வட இந்திய படங்கள் என்று வித்தியாசம் பார்க்க தெரியாது. அனைத்து மொழிகளிலும் எனக்கு நடிக்க ஆசை இருக்கிறது. பிரபாஸ் உடன் கல்கி படத்தில் நடித்தேன். அப்போது அவர் படப்பிடிப்பில் வீட்டிலிருந்து உணவை வரவைத்து அனைவருக்குமே பரிமாறி இருந்தார்.

திஷா பதானி ஆசை:

இப்போ சூர்யாவுடன் கங்குவா படத்திலும் நடித்துக் கொண்டிருக்கிறேன். இது ரொம்ப சந்தோஷத்தை கொடுத்திருக்கிறது. விளம்பரப் படங்களிலும் நடிக்கிறேன். என்னுடைய அப்பா போலீஸ் அதிகாரி. அம்மா சுகாதார துறையில் இன்ஸ்பெக்டராக இருக்கிறார். என்னுடைய சகோதரி இந்திய ராணுவத்தில் லெப்டினன்ட் கர்ணல். எனக்கு விமானப்படை பைலட்டாக வேண்டும் தான் ஆசை. ஆனால், அந்த கனவை விட்டு நான் நடிகையாகி இருக்கிறேன். நடனம், குத்துச்சண்டை, ஜிம்னாஸ்டிக் போன்றவை எல்லாம் கற்று இருக்கிறேன் என்று கூறி இருக்கிறார்.

Advertisement