நான் இப்படியும் கார்த்தி அப்படியும் நடிக்க ஆசை – அன்றே கணித்த சூர்யா. அப்போ விக்ரம் 3ல Rolex Vs Dilli யா ?

0
1080
surya
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான இயக்குனராக திகழ்ந்து கொண்டு இருப்பவர் லோகேஷ் கனகராஜ். இவர் இயக்கிய மாநகரம், கைதி, மாஸ்டர் போன்ற படங்கள் எல்லாம் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்து இருக்கிறது. தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடிப்பில் வெளிவந்து இருக்கும் படம் விக்ரம். இந்த படத்தை கமலின் ராஜ்கமல் இண்டர்நேஷனல் நிறுவனம் உடன் இணைந்து உதயநிதி ஸ்டாலின் தயாரித்து இருக்கிறது. இந்த படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில், காளிதாஸ் ஜெயராம், ஷிவானி, மைனா நந்தினி உட்பட பல நடிகர்கள் நடித்து இருக்கிறார்கள். இந்த படத்தைப் பொருத்தவரை ஒரு பழிவாங்கல் கதை என்றாலும் இயக்குனர் அதை சொல்லிய விதமும், படமாக்கிய விதமும் பாராட்டுகளை குவித்து இருக்கிறது.

-விளம்பரம்-
This image has an empty alt attribute; its file name is image-22.png

படத்தில் கமலின் மகனாக காளிதாஸ் நடித்திருக்கிறார். போதை பொருள் கடத்தல் கும்பலால் கமலின் மகன் கொல்லப்படுகிறான். இதை அறிந்த கமல் தன் மகனைக் கொன்றவர்களைத் பழிவாங்க நினைக்கிறார். பின் அடுத்தடுத்து நடக்கும் சுவாரஸ்யமே படத்தின் கதை. மேலும், அனைவரும் எதிர்பார்த்திருந்த கமலின் விக்ரம் படம் நான்கு ஆண்டுகளுக்கு பின் வெளிவந்து இருப்பதால் ரசிகர்கள் திரையரங்கில் கொண்டாடி வருகிறார்கள். படத்தின் திரைக்கதையில் உள்ள வேகமும், விறுவிறுப்பும் பார்வையாளர்களை பார்க்க தூண்டுகிறது.

- Advertisement -

விக்ரம் படம் பற்றிய தகவல்:

ஒவ்வொரு காட்சியிலும் கமலும், லோகேஷ் கனகராஜூம் மெனக்கெட்டு மாஸ் காட்டி இருக்கிறார்கள். விக்ரம் திரைப்படம் அனைத்து தரப்பு ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் மாஸாக இருக்கிறது. அதோடு விக்ரம் படம் வெளிவந்து எல்லா இடங்களிலும் முதல் நாளே நல்ல வசூல் வேட்டை நடத்தி இருப்பதாக கூறப்படுகிறது. பிரபலங்கள் பலரும் விக்ரம் படத்தை பார்த்து பாராட்டி வருகின்றனர். மேலும், விக்ரம் படம் வெளியானதிலிருந்து அனைவர் மத்தியிலும் சூர்யாவின் கதாபாத்திரம் குறித்து அதிகமாக பேசப்பட்டு வருகிறது. படத்தின் கடைசி நிமிடத்தில் சூர்யா வந்திருந்தாலும் மிரட்டி சென்றிருக்கிறார்.

This image has an empty alt attribute; its file name is 1-75-1024x1017.jpg

விக்ரம் படம் குறித்து சூர்யா டீவ்ட்:

இது நாள் வரை படத்தில் தன்னுடைய கதாபாத்திரம் குறித்து வாய் திறக்காமல் இருந்த சூர்யா தற்போது முதன்முறையாக விக்ரம் படம் குறித்து ட்வீட் ஒன்று போட்டிருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பது, அன்புள்ள கமலஹாசன் அண்ணா. விக்ரம் படத்தில் உங்களுடன் நடித்ததன் மூலம் என் கனவு நிறைவேறி உள்ளது. இதை உருவாக்கி கொடுத்த இயக்குனர் லோகேஷ் கனகராஜுக்கு நன்றி என்று பதிவிட்டிருக்கிறார்.

-விளம்பரம்-

விக்ரம் படத்தில் ஏற்கனவே கைதி படத்தில் வந்த கார்த்தியின் குரல் மட்டும் கேட்கப்பட்டது. விக்ரம் படத்தின் கிளைமாக்ஸ்சிலும் விக்ரம் 2 தொடர்ச்சிக்க்கான அடித்தளத்துடன் தான் முடித்தனர். எனவே, விக்ரம் 2 உருவானால் அதில் கார்த்தயும் இடம்பெறுவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்படி ஒரு நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் மேடையில் பேசிய சூர்யாவின் வீடியோ ஒன்று தற்போது வைரளாகி வருகிறது.

அன்றே கணித்த சூர்யா :

அதில் ‘ஒரு படத்துலயாவது நான் சைலன்ட்டான ஒரு வில்லனாகவும், கார்த்தி பட்டையெல்லாம் போட்டுகொண்டு ஒரு நல்ல பையனாவே இருக்கனும். அப்படி ஒரு படம் நடிச்சு பாக்கணும்னு ஆசை. ஒரு இமேஜ் மாறும்னு ஒரு ஆசை’ என்று பேசி இருக்கிறார். தற்போது இந்த வீடியோ வைரலாக பரவ ‘அன்றே கணித்தார் சூர்யா’ என்று ரசிகர்கள் பலரும் கூறி வருகின்றனர். அதே போல இரும்புக்கை மாயாவி என்ற படத்தை சூர்யாவை வைத்து லோகேஷ் கனகராஜ் இயக்க இருந்தது.

This image has an empty alt attribute; its file name is 1-66-1024x716.jpg

சூர்யா-லோகேஷ் கூட்டணி:

ஆனால், அந்தப் படம் டிராப் ஆகிவிட்டது. இதுகுறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய லோகேஷ் கனகராஜ் ‘ இது ரொம்ப பெரிய படமாக இருக்கு. நான் தாங்குவேன்னா என்று எனக்கே தெரியவில்லை. இந்த படம் இயக்க முடியுமா? என்ற நம்பிக்கையும் இல்லை. கொஞ்சம் காலம் சென்ற பின் பண்ணிக்கலாம் என்று சொல்லி இந்த படம் டிராப் ஆனதற்கு முழுக்க முழுக்க நான் தான் காரணம் என்று கூறி இருந்தார். தற்போது விக்ரம் படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து சூர்யாவின் இரும்புக்கை மாயாவி படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குவார் என்று ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement