பாலிவுட்டில் பிரம்மாண்ட சரித்திர கதையில் நடிகர் சூர்யா நடிக்க இருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் பல ஆண்டு காலமாக முன்னணி நடிகராக கலக்கிக் கொண்டிருப்பவர் சூர்யா. இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. மேலும், சமீபத்தில் சூர்யாவின் 24 வது படமான சூரரைப் போற்று 5 பிரிவுகளில் 5 தேசிய விருதுகளை வென்று குவித்தது.

இதனால் பலரும் சூர்யாவிற்கு பாராட்டுகளை தெரிவித்து இருந்தார்கள். தற்போது சூர்யா அவர்கள் சிறுத்தை சிவா இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். முதன் முறையாக சூர்யா- சிறுத்தை சிவா கூட்டணியில் உருவாகும் படத்திற்கு கங்குவா என்று பெயர் இடப்பட்டு இருக்கிறது. இந்த படத்தை யூவி கிரியேஷன் நிறுவனமும் ஸ்டுடியோ கிரீன் நிறுவனமும் இணைந்து தயாரித்து வருகிறது. இந்த படத்தில் நடிகர் சூர்யாவுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை திஷா பதானி நடிக்கிறார்.

Advertisement

சூர்யா- சிறுத்தை சிவா கூட்டணி:

இவர்களுடன் இந்த படத்தில் யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, கோவை சரளா உட்பட பலர் நடிக்கிறார்கள். இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. மேலும், இந்த படத்தை இரண்டு பாகங்களாக வெளியிட படக்குழு திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது. மேலும், இந்த படம் 3டில் உருவாக இருப்பதாக படக்குழு கூறி இருக்கின்றனர்.

படம் குறித்த தகவல்:

அதோடு இந்த படம் இரண்டு வெவ்வேறு காலகட்டங்களில் நடைபெறும் என்று கூறப்படுகிறது. இந்த படம் 10 மொழிகளில் வெளியாகயிருக்கிறது. அது மட்டும் இல்லாமல் இந்த படத்தில் நடிகர் சூர்யா அவர்கள் ஐந்து விதமான கெட்டப்பில் நடிக்கிறார். இந்த படத்தின் ரிலீஸ்காக ரசிகர்கள் பலரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். இதனை அடுத்து சூர்யா அவர்கள் வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் என்ற படத்தில் நடிக்க இருக்கிறார். அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகியிருக்கிறது.

Advertisement

பாலிவுட்டில் சூர்யா:

அதுமட்டுமில்லாமல் இயக்குனர் சுதா உடன் இணைந்து ஒரு படத்தில் சூர்யா நடிக்க இருக்கிறார். இப்படி பல படங்களில் சூர்யா கமிட் ஆகி நடித்து வரும் நிலையில் பாலிவுட் படத்தில் கமிட்டாக இருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது, பாலிவுட் நடிகர் ராகேஷ் ஓம்பிரகாஷை சமீபத்தில் நடிகர் சூர்யா சந்தித்து இருக்கிறார். இவர்கள் இருவரும் இணைந்து மகாபாரதத்தில் வரும் கர்ணனின் கதாபாத்திரத்தை வைத்து ஒரு படம் பண்ண இருக்கிறார்கள்.

Advertisement

படம் குறித்த விவரம்:

அதிலும் கர்ணனாக சூர்யாவே நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. மேலும், இந்த படத்தை பான் இந்திய படமாக அதுவும் இரண்டு பாகங்களாக எடுக்க திட்டமிட்டு இருக்கின்றனர். இந்த படத்தினுடைய படப்பிடிப்பு 2024 ஆம் ஆண்டு தொடங்கும் என்று கூறப்படுகிறது. இதைக் கூடிய விரைவிலேயே சூர்யா அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார் என்றும் கூறப்படுகிறது. ஏற்கனவே மகாபாரத கதையை படமாக எடுக்க பலரும் முயற்சித்து வருகிறார்கள். அந்த வகையில் சமீபத்தில் கூட ராஜமவுலி மகாபாரத கதையை எடுக்க இருப்பதாக கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement