பாலிவுட்டை போல தமிழ் சினிமாவிலும் எத்தனை வாரிசு நடிகர் நடிகைகள் இருக்கின்றனர். அந்த வகையில் விஜயலட்சுமியும் ஒருவர் தான். இவர் திரைப்பட இயக்குனர் அகத்தியனின் மகள் ஆவார். இவர் 2007 ஆம் ஆண்டு வெங்கட்பிரபு இயக்கத்தில் வெளிவந்த சென்னை 600028 என்ற படத்தின் மூலம் நடிகையாக சினிமா உலகிற்கு அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து இவர் அஞ்சாதே, அதே நேரம் அதே இடம், சரோஜா, கற்றது களவு போன்ற பல படங்களில் நடித்து இருந்தார். பிறகு சினிமாவில் வாய்ப்புகள் குறையத் தொடங்கி உடன் இவர் சின்னத்திரை பக்கம் சென்று விட்டார்.
பிக் பாஸ் & சர்வைவர் :
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாம் சீசனில் போட்டியாளராக பங்கேற்றார் விஜயலட்சுமி. ஆனால், அந்த சீசனில் இவர் பைனல் வரை வர முடியவில்லை. இதை தொடர்ந்து இவர் ஒரு சில சீரியல்களில் கூட நடித்து இருந்தார். ஆனால், அந்த தொடரும் எதிர்பார்த்த அளவு வெற்றிபெறவில்லை. இதை தொடர்ந்து பின் அனைவரும் எதிர்பார்த்த 90 நாட்கள் சர்வைவர் முடிவில் விஜயலட்சுமி டைட்டிலை பெற்றது மிக பெரிய வியப்பாக இருந்தது.
திருமணம் :
இதற்காக இவருக்கு ஒரு கோடி ரூபாய் பரிசாக வழங்கப்பட்டது. விஜயலக்ஷ்மி தனது பள்ளி பருவ தோழரான பெரோஸ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். பெரோஸ் தமிழில் தீராத விளையாட்டு பிள்ளை, சமர், நான் சிகப்பு மனிதன் போன்ற படங்களை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
விஜயலட்சுமி கொடுத்திருந்த பேட்டி :
இந்த நிலையில் தான் சமீபத்தில் கௌதமி இவரை போட்டி எடுத்திருந்தார். அந்த பேட்டியில் தன்னால் சினிமாவில் வெற்றியடைய முடியாததற்கு காரணம் குறித்து பேசியிருந்தார். அவர் கூறுகையில் நடிகைகளை படத்திற்காக படுக்கைக்கு அலைக்கும் விஷியம் குறித்து மிகவும் கோவமாக பேசியிருந்தார். ஒரு நல்ல படம் வெற்றியடைய வேண்டும் என்றாலே அதற்கு கண்டிப்பாக 10 பேரின் முயற்சி தேவைப்படும். போட்டி அதிகமாக இருப்பதினால் சிலர் சில விஷியங்களை செய்ய வேண்டிய நிலைமை ஏற்படுகிறது.
பல இடங்களில் அது இருக்கிறது :
மேலும் மறைமுகமாக கூறிய விஜயலட்சிமி இயக்குனர் அது பண்ணுவியா என்று இயக்குனர்களும் கேட்பதில்லை. ஆனால் சிலர் அதையும் செய்யவேன் என்று வருவார்கள். எல்லா இடங்களிலும் அது இருக்கிறது என்று நான் சொல்லவில்லை ஆனால் பல இடங்களில் இந்த மாதிரியான விஷியங்கள் நடக்கின்றது. ஒரு பெண் அப்படி செய்யும் போது பின்னர் வரும் பெண்களிடமும் அவர் அதனை எதிர்பார்க்கின்றனர். ஆனால் நான் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை என விஜயலட்சிமி கூறினார்.
நாயகி தொடரில் இருந்து விலகிய காரணம் :
சன் டிவியில் நாயகி என்ற தொடரில் நடித்துக் கொண்டிருந்தேன், அந்த நேரம் என்னுடைய மகனுக்கு 7 மாதம் எனவே உணவளித்து கொண்டிருந்தேன். அந்த தொடரில் ப்ரிம் டைம் வந்த விஷயம் அதோடு அந்த கதாபாத்திரமும் எனக்கு மிகவும் பிடித்து விட்டது. சீரியல் தொடங்கி டிரபியிலும் NO 1 வந்து விட்டது. அந்த சமயம் தான் எனக்கும் இயக்குனருக்கும் சிறிய வாக்குவாதம் அதவது நம்முடைய சுயமரியாதையை விட்டுக்கொடுக்காத ஒரு தருணம் எனக் கூறலாம். அதனால் பிரச்சனை ஏற்ப்பட்டு தொடரில் இருந்து விலக நேர்ந்தது.
ஆனந்தி என்ற கதாபாத்திரம் எனக்கு மிகவும் பிடித்து நடித்து வந்தேன். நன்றாக சென்று கொண்டிருந்த நேரத்தில் அடுத்தநாள் படப்பிடிப்பு போலாம் என்றிருந்த நேரத்தில் இந்த விஷயம் நடந்தது. நான் சிரியலை விட்டு வெளியில் வந்துவிட்டேன். அவர்கள் தான் இந்த பிரச்சனையினால் மாற்று நடிகையை தேர்தெடுக்க முயற்சி செய்கிறோம் என்று கூறினார்கள். நான் அக்ரீமெட் அப்டியெல்லாம் பார்ப்பது கிடையாது அவர்கள் இதனை கூறிய உடனே சரி நான் விலகி கொள்கிறேன் என்று கூறிவிட்டேன்.