தன்னை ஜூலியுடன் ஒப்பிட்டவர்களுக்கு சர்வைவரில் இருந்து வெளியே வந்ததும் பதிலடி கொடுத்த பார்வதி.

0
1437
parvathy
- Advertisement -

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் சர்வைவர் நிகழ்ச்சி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுக் கொண்டிருக்கின்றது. இந்த நிகழ்ச்சியை நடிகர் அர்ஜுன் தொகுத்து வழங்கி வருகிறார். சவால்கள் நிறைந்த தனித்தீவில் 18 போட்டியாளர்கள் களம் இறக்கி விட்டார்கள். இந்த நிகழ்ச்சியின் இரண்டாவது நாள் அன்றே போட்டியாளர்களுக்குள் குழாயடி சண்டை அளவிற்கு சர்ச்சைகள் பயங்கரமாக கிளம்பி இருந்தது.

-விளம்பரம்-
சர்வைவர்

பின் வாரம் வாரம் போட்டியாளர்களை எலிமினேட் செய்து வருகிறார்கள். அந்த வகையில் கடந்த வாரம் சர்வைவர் நிகழ்ச்சியில் இருந்து விஜே பார்வதி வெளியேறினார். விஜே பார்வதி சர்வைவர் நிகழ்ச்சியில் இருந்தபோது அவர் பண்ண சேட்டைகள் எல்லாம் அனைவருக்கும் தெரிந்ததே. சென்ற இரண்டாம் நாளே சக போட்டியாளர்களின் வெறுப்பை சம்பாதித்தார் பார்வதி.

- Advertisement -

சர்வைவர் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்தவுடன் பார்வதியிடம் பேட்டி எடுக்கப்பட்டது. அதில் பார்வதியிடம் சர்வைவர் நிகழ்ச்சியில் பல இடங்களில் நீங்க டென்சன் ஆனது குறித்தும், நான் கார்னர் செய்யப்பட்டேன் என்று கூறியதை குறித்து கேட்டதற்கு பார்வதி கூறியது, சர்வைவர் நிகழ்ச்சியை பொருத்தவரைக்கும் அடிப்படை வசதிகள் மட்டும் தான் அங்கு செய்து தருவார்கள்.

யாருமே கார்னர் செய்யாமல் நானாவே தான் கார்னர் செய்யப்பட்ட மாதிரி உணர்ந்தேன் என்று பலர் சொல்கிறார்கள். ஆனால், நான் கார்னர் செய்யப்பட்டது உண்மை. அங்கு நடந்த வலி வேதனை எல்லாம் எனக்கு மட்டும்தான் தெரியும் என்று கூறியுள்ளார். அதே போல சர்வைவர் நிகழ்ச்சியில் இருந்த போது இவரை பலரும் அடுத்த ஜூலி என்று கேலி செய்தனர்.

-விளம்பரம்-

இதுகுறித்து பதில் அளித்துள்ள பார்வதி, ஜூலியை பற்றி பேசுவதற்கும் கேலி செய்வதற்கும் எனக்கு எந்த உரிமையும் இல்லை. என்னை கேலி செய்பவர்கள் செய்து கொண்டுதான் இருப்பார்கள். என்னை கேலி செய்ய வேண்டுமென்றால் செய்யுங்கள், திட்ட வேண்டுமென்றால் திட்டுங்கள். ஆனால் எனக்கென்று ஒரு தனித்தன்மை இருக்கிறது. இவங்கள மாதிரி அவங்கள மாதிரின்னு என்னை கம்பேர் பண்ணிப் பேசுறதுலாம் எனக்குப் பிடிக்காது என்று கூறியுள்ளார்.

Advertisement