பொன்மகள் வந்தாள் இயக்குனருக்கு சூர்யா ஜோதிகா கொடுத்த விலையுர்ந்த பரிசு.

0
1448
- Advertisement -

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக திகழ்ந்து கொண்டிருப்பவர் நடிகை ஜோதிகா. 2006-ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவரான சூர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார் ஜோதிகா. திருமணத்துக்கு பிறகும் ஜோதிகா அவர்கள் 36 வயதினிலே, மகளிர் மட்டும், நாச்சியார், செக்கச் சிவந்த வானம், காற்றின் மொழி, ராட்சசி, ஜாக்பாட், தம்பி ஆகிய படங்களில் நடித்து உள்ளார். தற்போது
நடிகர் சூர்யா தயாரிப்பில் நடிகை ஜோதிகா நடித்து உள்ள படம் ‘பொன்மகள் வந்தாள்’. இந்த படத்தை இயக்குனர் ஜே.ஜே.பெட்ரிக் இயக்கி இருக்கிறார்.

-விளம்பரம்-
பொன்மகள் வந்தாள் இயக்குனருடன் சூர்யா

நாடு முழுவதும் கொரோனா காரணமாக தியேட்டர்கள் மூடப்பட்டு இருப்பதால் பொன்மகள் வந்தாள் படத்தை OTT எனப்படும் ஆன்லைன் தளத்தில் ரிலீஸ் செய்தார்கள். ஒரு பெண்ணின் மரணத்தில் இருக்கும் மர்மத்தைக் கண்டுபிடித்து நீதிக்காகப் போராடும் இன்னொரு பெண்ணின் கதையே பொன்மகள் வந்தாள். இந்த படம் ஆன்லைன் தளம் மூலமாகவே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

- Advertisement -

இந்நிலையில் பொன்மகள் வந்தாள் படத்தின் இயக்குனர் ஜே.ஜே.பெட்ரிக் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு நடிகர் சூர்யா மற்றும் ஜோதிகா விலை உயர்ந்த பரிசுப் பொருட்களை வழங்கி உள்ளனர். அந்த மகிழ்ச்சியான புகைப்படங்களை சோசியல் மீடியாவில் வெளியிட்டு இயக்குனர் அவர்களுக்கு நன்றி தெரிவித்து உள்ளார்.

அதில் அவர் கூறி இருப்பது, ஜோதிகா மேம், சூர்யா சார் நீங்கள் கொடுத்த மறக்க முடியாத பரிசு பொருட்களுக்காக நன்றி. இருந்தாலும் உங்களுடைய நட்பு தான் எனக்கு கிடைத்த மிக சிறந்த பரிசு. உங்களது அளவு கடந்த அன்பு தான் பொன்மகள் வந்தாள் படத்தின் வெற்றிக்குக் காரணம். வார்த்தைகளால் எனது நன்றியை தெரிவிக்க முடியாது என்று மகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement