புத்தாண்டு ஸ்பெஷல் கொண்டாட்டம் : சூர்யா ஜோதிகாவின் மகன் மற்றும் மகள். என்ன இப்படி வளந்துட்டாங்க.

0
3539
surya
- Advertisement -

இன்று 2021 புத்தாடை உலகம் முழுதும் உள்ள மக்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில் நேற்று பலர் தாங்கள் கொண்டாடிய புத்தாண்டு கொண்டாட்டங்களை சமூகவலைதளங்கில் பகிர்ந்து கொண்டனர். அதே பிரபலங்களில் பலர் புத்தாண்டின் முதல் புகைப்படம் என பகிர்ந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். அந்த வகையில் தமிழ் சினிமாவில் நட்சத்திர ஜோடிகளிள் ஒருவர்களாக திகழ்ந்து வரும் சூர்யா – ஜோதிகா ஆகிய இருவரும் தனது குடும்பத்தினருடன் புத்தாண்டை கொண்டாடியுள்ளனர். அந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

-விளம்பரம்-

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான ஜோடிகளான அஜித்-ஷாலினி ,பிரசன்னா-சினேகா மற்றும் சூர்யா-ஜோதிகா இதில் மிகவும் பிரபலமான ஜோடி தான் சூர்யா-ஜோதிகா. நடிகர் சூர்யா அவர்கள் நடிகை ஜோதிகா உடன் அவர்கள் நடிகர் சூர்யாவுடன் 7 படத்திற்கு மேல் அவருடன் இணைந்து ஜோடியாக நடித்து உள்ளார். பின் இருவரும் காதலித்து 2006 ஆம் அவர்கள் செப்டம்பர் 11ம் தேதி இரு வீட்டில் உள்ள பெற்றோர்களின் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். தமிழ் சினிமா உலகில் இவர்கள் இருவரும் சிறந்த தம்பதிகளாக திகழ்ந்து வருகிறார்கள்.

- Advertisement -

திருமணத்திற்கு பின்னர் இவர்களுக்கு தியா என்ற மகளும் தேவ் என்ற மகனும் பிறந்தனர்.குடும்பமே சினிமாவில் இருந்து வந்தாலும் இதுவரை தியா மற்றும் தேவ் இருவரும் சினிமாவில் முகம் காட்டியதில்லை. இதில் தியா டென்னிஸ், கால்பந்து விளையாட்டுகளில் கவனம் செலுத்தி வரும் தியா, கிரிக்கெட்டிலும் அசத்தி வருகிறார். தனது சகோதரியை போல படிப்பை தாண்டி தேவ், கராத்தே கலையில் மிகுந்த ஆர்வம் கொண்டவராக இருக்கிறார். தேசிய அளவிலான ஷென் இஷ்ரின்யூ கராத்தே போட்டியில் கலந்து கொண்ட சூர்யாவின் மகன் தேவ் வெற்றியும் அடைந்தார்.

இப்படி ஒரு நிலையில் நடிகர் சூர்யா மற்றும் நடிகை ஜோதிகா இருவரும் புத்தாண்டு கொண்டாட்டத்தை ஜோதிகாவின் சகோதரியும் நடிகையுமான நக்மா குடும்பத்தாருடன் கொண்டாடி இருக்கிறார். அப்போது எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலா.க பரவி வருகிறது. இந்த புகைப்படத்தில் சூர்யாவின் மகன் மற்றும் மகள் இருவரையும் பார்த்த ரசிகர்கள் இருவரும் என்ன இப்படி வளர்ந்து விட்டார்கள் என்று வியப்படைந்து இருக்கிறார்கள்.

-விளம்பரம்-
Advertisement