ஜீ தமிழ் நடத்திய வாக்கெடுப்பால் கடுப்பான சூர்யா ரசிகர்கள். ஆதரவாக விஜய் மற்றும் அஜித் ரசிகர்கள்.

0
35411
vijay-ajith-surya

தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா சிவகுமார். செல்வராகவன் என்ஜிகே மற்றும் காப்பான் படங்களைத் தொடர்ந்து தற்போது இவர் வெற்றிமாறன் இயக்கத்தில் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்நிலையில் நடிகர் சூர்யாவிற்கு உரிய அங்கீகாரத்தை கொடுக்கவில்லை என ரசிகர்கள் எல்லாரும் பயங்கர கொந்தளிப்பில் சமூக வலைத்தளங்களில் தாறுமாறாக கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகர் சூர்யா. தொலைக்காட்சியில் பிரபலமான சேனல்களில் ஜீ தமிழ் ஒன்று. ஜீ தமிழ் தொலைக்காட்சியில் அவார்ட்ஸ் செராமனி அதாவது ஜீ அவார்ட்ஸ் தமிழ்-2020 என்ற விருது வழங்கும் விழா ஒன்றை ஏற்பாடு செய்து உள்ளார்கள்.

அதில் சிறந்த நடிகர், நடிகைகள் என பல பிரிவுகளில் விருதுகள் வழங்குகிறார்கள். அந்தவகையில் யாருடைய கண்கள் ரொம்ப பவர்ஃபுள் என்று குறிப்பிட்டு அதில் “ரஜினிகாந்த், விஜய், அஜித் குமார், ராகவா லாரன்ஸ், கார்த்தி, தனுஷ்” என நடிகர்களின் கண்களை பதிவிட்டு உள்ளார்கள். மேலும், அதில் கமலஹாசன், விக்ரம், சூர்யா அவர்களின் கண்கள் வரவில்லை. ஏன் எங்க அண்ணன் சூர்யா அவர்கள் கண்கள் எல்லாம் அந்த அளவிற்கு பவர் இல்லையா?? என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பினார்கள். அதுமட்டும் இல்லாமல் சூர்யா ரசிகர்கள் அனைவரும் ஜீ தமிழ் சேனலுக்கு எதிராக பல விமர்சனங்களை சமூக வலைத்தளங்களில் உருவாக்கி தாறுமாறாக பதிவிட்டு வருகின்றனர்.

- Advertisement -

இதையும் பாருங்க : நாம் இருவர் நமக்கு இருவர் சீரியல் நடிகை ரேகாவின் கணவர் தற்கொலை. கணவர் மனைவி பிரச்சனை காரணமா?

மேலும், போஸ்டரில் கூட அஜித், விஜய், ரஜினி, சிவகார்த்திகேயன், கார்த்திக் மற்றும் தனுஷ் புகைப்படங்களை மட்டும் போட்டு உள்ளீர்கள். சூர்யாவை அதில் கூட போடவில்லை. ஏன் சூர்யா அவர்கள் அந்த அளவிற்கு பிரபலம் ஆகவில்லையா? இல்லை ரசிகர்கள் இல்லையா?? என ரசிகர்கள் கொந்தளித்து கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள். மேலும், நடிகர் சூர்யாவின் கண்களை ட்விட்டரில் பதிவிட்டு இது தான் பவர்ஃபுல்லான கண் என்றும் கூறி வருகின்றனர் ரசிகர்கள். சூர்யா ரசிகர்கள் மட்டுமில்லாமல் பல பிரபலங்களின் ரசிகர்களும் சூர்யாவுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகிறார்கள். ஜீ தமிழ் தொலைக்காட்சிக்கு எதிராக கருத்துக்களை பதிவிட்டும் வருகின்றனர் ரசிகர்கள்.

-விளம்பரம்-

அதிலும் ஒருவர் தளபதி விஜய்யின் ரசிகராக இருந்தாலும் சூர்யா பக்கத்துக்கு ஆதரவாக பேசி உள்ளார். இதுமட்டுமல்லாமல் பல்வேறு நடிகர்களின் ரசிகர்களும் சூர்யாவின் கண் தான் பவர்புள் கண்கள் என்று அனைவருக்கும் தெரியும் என்று சூர்யாவிற்கு ஆதரவாக கமன்ட் செய்து வருகிறார்கள். இது ஒருபுறம் இருக்க நடிகர் சூர்யா, என் ஜி கே, காப்பான் படங்களை தொடர்ந்து சூர்யாவின் அடுத்த படத்தை வெற்றிமாறன் இருக்கிறார். வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படம் “சூரரைப் போற்று”.

இந்த படத்தை கலைப்புலி தாணு அவர்கள் தயாரிக்க உள்ளார் என்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது. அசுரன் படத்தை தொடர்ந்து விஜய், சூர்யாவுடன் வெற்றிமாறன் அவர்கள் இணைகிறார். இதற்கிடையே வெற்றிமாறன் அவர்கள் நகைச்சுவை நடிகர் சூரியை வைத்து படம் இயக்குகிறார் எனவும் தெரிந்ததே. மேலும், இந்த படம் சூர்யாவின் 40வது படம் என்றும் கூறுகிறார்கள். மேலும், சூர்யாவின் 39 வது படத்தை ஹரி இயக்குகிறார் என்றும், அந்த படத்திற்கு இமான் இசையமைக்கிறார் என்ற செய்திகளும் வந்திருக்கிறது. இது குறித்து இன்னும் அதிகாரப்பூர்வமாக எந்த தகவலும் தெரியவில்லை. இந்த படம் அடுத்த வருடம் ஏப்ரல் மாதம் திரையரங்கிற்கு வெளியிடப்படும் என்றும் அறிவித்துள்ளார்கள்.

Advertisement