“இதுவே கடைசியா இருக்கட்டும். . எங்கள இப்படி கஷ்டப்படுத்தாதீங்க” – சூர்யவின் டீவீட்டால் கடுப்பான அவரின் ரசிகர்கள்.

0
9354
surya
- Advertisement -

நடிகர் சூர்யாவின் செயலால் ரசிகர்கள் சோசியல் மீடியாவில் தங்களுடைய வருத்தத்தை தெரிவித்து வருகின்றனர். தற்போது இது ரசிகர்கள் மத்தியில் காட்டுத் தீயை விட வேகமாக பரவி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிகப் பிரபலமான நடிகர்களில் ஒருவராக சூர்யா திகழ்ந்து கொண்டிருக்கிறார். இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் வசூலையும் பெற்று வருகின்றது. பெரும்பாலும் இவர் அறிவியல் சார்ந்த படங்களிலும், சமூக விழிப்புணர்வு ஏற்படுத்தும் படங்களையும் தான் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இதனால் இவருக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே சேர்ந்துள்ளது.

-விளம்பரம்-

மேலும், சமீபகாலமாக சூர்யா அவர்கள் பிற நடிகர்களின் படங்களை குறித்து சோசியல் மீடியாவில் தன்னுடைய கருத்துக்களையும், வாழ்த்துக்களையும் பகிர்ந்து வருகிறார். இதை வழக்கமான ஒன்றாக வைத்துள்ளார். இந்நிலையில் பிக் பாஸ் பிரபலம் முகென் நடித்த வேலன் படத்தின் டீசர் தற்போது வெளியாகி உள்ளது. இந்த படத்தில் பிரபு அவர்கள் துணை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படம் டிசர் குறித்து தற்போது சூர்யா அவர்கள் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து உள்ளார்.

- Advertisement -

அதில் அவர் கூறியது, பிரபு அண்ணாவுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள். வேலன் பட குழுவினருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள் என்று பதிவிட்டுள்ளார்.இதை பார்த்தவுடன் சூர்யாவின் ரசிகர்கள் கடுப்பாகி தங்களுடைய கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர். இவரின் ட்விட்டை பார்த்த ரசிகர் கூறியது, நான் 3 வருடங்களுக்கு மேலாக உங்களுடைய ட்விட்டரை பின் தொடர்ந்து வருகிறேன்.

ஆனால், நீங்கள் இதுவரை எனக்கு ஒரு லைக் கூட கொடுத்ததில்லை. நீங்கள் மிகத் திறமையான, நேர்மையான நடிகர். உங்கள் திறமையை பிற நடிகர்கள் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். ஏன் நீங்கள் அதை செய்கிறீர்கள்? முதலில் நீங்க உங்களுடைய பட புரமோஷன் பத்தி பாருங்கள். சும்மா எல்லாருக்கும் பிரமோஷன் போட்டு உங்க மதிப்பை குறைக்காதிங்க. நல்லவரா இருக்கலாம், ரொம்ப நல்லவராக இருக்காதீங்க. உங்களுக்கு ஒரு தனி ரசிகர் கூட்டமே இருக்கு.

-விளம்பரம்-

ஆனால், நீங்கள் உங்கள் ரசிகர்களுக்கு என்று நேரத்தை ஒதுக்க மாட்டுகீரிர்கள். பிற நடிகர்களின் படங்களுக்கு முக்கியத்துவம் தரும் நேரத்தில் உங்களுடைய ரசிகர்களையும் தொடர்பு கொண்டு பேசுங்கள்.அவர்களுடன் உங்களுடைய கருத்தை பகிருங்கள். உங்கள் அன்பைக் கொடுங்கள். சமீபத்தில் ஜெய் பீம் படத்தின் போஸ்டர் எல்லாம் வெளியாகி இருந்தது. ஆனால், நீங்கள் உங்களுடைய படம் குறித்து எந்த ஒரு தகவலையும் ட்விட்டரில் போடவில்லை என்பது வருத்தமாக இருக்கிறது.

தயவுசெய்து இப்படி செய்வதை நிறுத்திக் கொள்ளுங்கள். உங்களை நாங்கள் மிகவும் நேசிக்கிறோம். உங்களை நாங்கள் ட்வீட் போட வேண்டாம் என்று சொல்லவில்லை. உங்க படத்துக்கு முதலில் முக்கியத்துவம் கொடுங்கள். உங்களுடைய ரசிகர்களிடம் பேசுங்கள் என்று தான் கேட்கிறோம். இதோட இது லாஸ்ட்டாக இருக்கட்டும் அண்ணா, ப்ளீஸ் என்று பலரும் கேட்டு வருகின்றனர். இப்படி சூர்யாவின் ரசிகர்கள் பதிவிட்ட கருத்து சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

Advertisement