கே.வி.ஆனந்த்-சூர்யா அடுத்த படத்தில் இந்த முன்னணி நடிகர் வில்லனா.!

0
437

இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தின் நடிகர் சூர்யா “என்ஜிகே “என்ற படத்தில் நடித்து வருகிறார். சூர்யாவின் 36வது படமான இந்த படத்தில் நடிகைகள் சாய் பல்லவி, ராகுல் ப்ரீத் சிங் ஆகியோர் நடிக்கின்றனர்.இந்த படத்தில் மற்றுமோர் பிரபலம் இணைந்துள்ளார் என்று சமீபத்தில் வெளியான புகைப்படம் ஒன்று ஊர்ஜித படுத்தியுள்ளது.

Actor suriya

இந்த படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் சமுத்திரக்கனி, மலையாள நடிகர் மோகன் லால் மற்றும் பிரபல இந்தி நடிகர் போமன் ஹிராணி, போன்றவகைகள் நடிக்கின்றனர். இதில் நடிகர் போமன் ஹிராணிக்கு முதல் தமிழ் படம் என்பது குறிபிடத்தக்கது. இவர் இந்தியில் 3 இடியட்ஸ் படத்தில் “வைரஸ்” கதாபாத்திரத்தில் நடித்திருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இந்த படத்தின் ஷூட்டிங் தற்போது லண்டனில் நடைபெற்று வருகிறது. தற்போது நடிகர் ஆர்யா இந்த படத்தில் ஒரு நெகடிவ் ரோல் கதாபாத்திரத்தில் நடிக்கப்போகிறார் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளது. அதனை ஊர்ஜித படுத்தும் விதமாக சமீபத்தில் நடிகர் ஆர்யா லண்டனில் நடிகர் போமன் ஹிராணிவுடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.

Aarya

இந்த படத்தில் நடிகர் ஆர்யா நடிக்கிறார் என்று படக்குழு எந்த வித அறிவிப்பும் வெளியிடாத நிலையில் தற்போது வெளியாகியுள்ள இந்த புகைப்படத்தால், நடிகர் ஆர்யா இந்த படத்தில் நடிக்கிறாரா என்ற ஒரு சந்தேகம் எழுந்துள்ளது. மேலும், இந்த படத்தை அரசியல் கலந்த படமாக எடுத்து வருகின்றனர் என்று ஏற்கனவே வெளியாகி இருந்தது, ஒரு வேலை இந்த படத்தில் ஆர்யாவும் இணைந்தால் இந்த படம் மேலும் ஸ்வாரஸ்யமாக இருக்கும் என்று எதிர்பார்க்க படுகிறது.