தானா சேர்ந்த கூட்டம் படத்தை தொடர்ந்து நடிகர் சூர்யா செல்வராகவன் இயக்கத்தில் என் ஜி கே படத்தில் நடித்துள்ளார். இந்த படம் நாளை(மே 31) வெளியாக உள்ள நிலையில், இந்த படத்திற்காக வைக்கப்பட்ட பிரம்மாண்ட பேனரை மாவட்ட ஆட்சியர் நீக்க உத்தரவிட்டுள்ள சம்பவம் ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நீண்ட இடைவேளைக்கு பின்னர் செல்வராகவன் இயக்கத்தில் வெளியாகவிருக்கும் இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்த திரைப் படம் எப்போது திரைக்கு வரும் என பலரும் எதிர்பார்த்து வரும் நிலையில் இந்த படத்திற்கான பிரமோஷன் வேலைகளில் படக்குழு வீடு பட்டு வருகிறது.
இந்த நிலையில் திருவள்ளூர் மாவட்ட சூர்யா ரசிகர் மன்றம் சார்பில் இந்த படத்திற்கு 215 அடி உயரமான கட் அவுட் வைக்கப்பட்டுள்ளது. இறுதியாக சர்க்கார் படத்திற்குதான் 175 அடிக்கு கட் அவுட் அமைக்கப்பட்டிருந்தது. அதன்பின்னர் தல அஜித் நடிப்பில் வெளியான விஸ்வாசம் படத்திற்கு அதை விட உயரமான கட்டவுட் வைக்கப்பட்டிருந்தது.
இந்த கட் அவுட், ரூ.6.50 லட்சம் செலவில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த கட் அவுட் வைப்பதற்கு நகராட்சி நிர்வாகத்திடம் முறையாக அனுமதி பெறாததால் மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் தற்போது கட் அவுட் அகற்றப்பட்டுள்ளது. இதனால் சூர்யாவின் ரசிகர்கள் மிகுந்த வருத்தத்திற்கு உள்ளாகியுள்ளனர்.