24 பட செல்ஃபீ முதல், ஜோ ஆசை வரை நிறைவேற்றிய தோனி – சூர்யா சொன்ன சுவாரசிய தகவல்.

0
2367
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக சூர்யா திகழ்ந்து கொண்டிருக்கிறார். இவர் நடிப்பில் வெளிவந்த பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் வசூலையும் பெற்றுள்ளது. சூர்யா மற்றும் ஜோதிகா இருவரும் இணைந்து 2டி என்டர்டைன்மெண்ட் நிறுவனம் சார்பில் பல படங்களை தயாரித்து வெளியிட்டு உள்ளார்கள். அந்த வகையில் 2டி என்டர்டைன்மெண்ட் நிறுவனம் சார்பாக ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும், உடன்பிறப்பே ஆகிய படங்கள் நேரடியாக அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றது. இதனைத் தொடர்ந்து தற்போது சூர்யாவின் ஜெய் பீம் திரைப்படத்தின் டீசர் வெளியாகி உள்ளது. இந்த படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நவம்பர் 2 ஆம் தேதி அமேசான் பிரைம்மில் வெளியாக உள்ளது.

-விளம்பரம்-

இந்த படத்தை ஞானவேல் இயக்கியுள்ளார். இந்த படத்துக்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். மேலும், இந்த படத்தில் லிஜோமோல் ஜோஸ், பிரகாஷ்ராஜ், ரஜிஷா விஜயன் உட்பட பல நடிகர்கள் நடித்துள்ளார்கள். பழங்குடியின பெண்ணின் பிரச்சனைக்காக போராடும் வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் சூர்யா இந்தப் படத்தில் நடித்துள்ளார். மேலும், நேற்று விஜயதசமியை முன்னிட்டு படத்தின் டீசர் வெளியானது. டீசர் வெளியானது தொடர்ந்து சோசியல் மீடியாவில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்நிலையில் ஐபிஎல் இறுதிப் போட்டியில் ஜெய் பீம் படத்தை விளம்பரப்படுத்தும் நிகழ்ச்சியில் சூர்யா அவர்கள் கலந்து கொண்டிருந்தார்.

- Advertisement -

இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனியை குறித்து ஆச்சரியப்படுத்தும் சில விஷயங்களை பேசியுள்ளார். அதில் சூர்யா கூறியிருப்பது, ரசிகர்களுடைய அன்பை எப்படி திருப்பு கொடுப்பது என்று நான் தவித்துக் கொண்டிருக்கிறேன். ஆனால், தோனி எப்போதுமே அதை தவற விட்டதில்லை. அழுது கொண்டிருந்த சிறுமியை ஆட்டத்தில் வெற்றி பெற்றதும் அதில் கையெழுத்திட்டு அந்த சிறுமிக்கு தோனி கொடுத்திருக்கிறார். உடனே அந்த சிறுமியை சிரிக்க வைத்திருக்கிறார். அந்த சிறுமியின் வாழ்க்கையில் அந்த தருணத்தை என்றும் மறக்க முடியாத வகையில் தோனி செய்துள்ளார்.

அதேபோல் என் மனைவி ஜோதிகா ஒருமுறை குழந்தைகளுடன் தோனியை பார்க்க வேண்டும் என்று கேட்டபோது அவரும் எங்களுக்கான நேரத்தை கொடுத்தார். எப்போதெல்லாம் அவரால் பிறருக்கு நேரத்தை கொடுக்க முடியுமோ அதை கொடுப்பதில் அவர் தயங்கியதே கிடையாது. 24 படத்தில் அவருடன் செல்பி எடுக்க கேட்டேன். தோனி அனுமதி கொடுத்தார். பிபிசியில் இருந்து அவர் ஆடும் பதிவுகள் வேண்டும் என்று கேட்டபோது அதற்கு சம்மதித்து வாங்கி கொடுத்தார். இப்படி தோனி ரசிகர்களின் ஆசைகளையும் சில கோரிக்கைகளையும் நிறைவேற்றி வருகிறார். அதோடு தோனியிடமிருந்து எனக்கு நிறைய அன்பு கிடைத்திருக்கிறது என்று சூர்யா பகிர்ந்துகொண்டார். இவர் பேசிய விஷயம் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

-விளம்பரம்-
Advertisement