துருவ நட்சத்திரம் படத்தில் முதலில் நடிக்கவிருந்து இந்த நடிகர் தான் – போட்டோ ஷூட் இதோ.

0
517
vikram

தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான இயக்குனர்களில் கௌதம் மேனனும் ஒருவர். கௌதம் மேனன் இயக்கத்தில் வெளிவந்த படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. தற்போது கௌதம் மேனன் இயக்கத்தில் சியான் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் துருவ நட்சத்திரம். இந்த படம் உருவாகி பல மாதங்கள் ஆயிற்று. ஆனால், சில காரணங்களால் இந்த படம் வெளியாகவில்லை. இந்தப் படத்தில் ரிது வர்மா, ஐஸ்வர்யா ராஜேஷ், சிம்ரன், அர்ஜுன் தாஸ், பார்த்திபன், நடன இயக்குனர் சதீஷ், ராதிகா, வம்சி, மாயா, DD என பல நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர்.

மேலும், இந்த படத்தில் பார்த்திபன் அவர்கள் முதன் முதலாக வில்லனாக நடித்து உள்ளார். மேலும், கௌதம் மேனன் மற்றும் ஐசரி கணேஷ் இணைந்து இந்த படத்தை தயாரித்து உள்ளனர். இந்தப் படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். சமீபத்தில் கூட கௌதம் மேனன் இந்த படத்தினை வெளியிடுவதற்கான அனைத்து பணிகளும் நடைப்பெற்று வருவதாகவும், இரண்டு நாட்கள் மட்டுமே படப்பிடிப்பு பாக்கி இருப்பதாகவும் கூறியிருந்தார்.

- Advertisement -

இந்த நிலையில் தற்போது துருவ நட்சத்திரம் படத்தின் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. அந்த புகைப்படத்தில் நடிகர் சூர்யா உள்ளார். முதலில் துருவ நட்சத்திரம் படத்தில் சியான் விக்ரம் கதாபாத்திரத்தில் சூர்யா தான் நடிக்கவிருந்தார். இப்படத்தின் கதையை முழுமையாக அவரிடம் கூறாததால் அப்படத்திலிருந்து நடிகர் சூர்யா விலகினார். அதன்பின் தான் சீயான் விக்ரம் இந்த படத்தில் நடித்தார்.

-விளம்பரம்-
Advertisement