சூர்யாவுடன் நடித்தது கூட பெருமைபடாமல், ஷூட்டிங்கில் நல்ல சாப்பாடு கிடைத்ததை பெருமையாக கூறிய ஜெய் பீம் பட முக்கிய நடிகர். நெகிழ்ச்சியான வீடீயோ.

0
584
Jaibhim
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக சூர்யா ஜொலித்துக் கொண்டிருக்கிறார். இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே நல்ல வரவேற்பை பெற்று உள்ளது. அதிலும் சமீபகாலமாக சூர்யா அவர்கள் கதைகளை தேர்ந்தெடுத்து படங்களில் நடித்து வருகிறார். மேலும், இவர் நடிப்பில் மட்டுமில்லாமல் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் மூலம் பல படங்களை தயாரித்து உள்ளார். அந்த வகையில் தற்போது சூர்யா அவர்கள் இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் ஜெய் பீம் என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படம் சில தினங்களுக்கு முன்பு தான் அமேசான் ப்ரைம் ஒடிடி தளத்தில் வெளியாகி உள்ளது.

-விளம்பரம்-

இந்த படத்தில் மணிகண்டன், லிஜோமோல் ஜோஸ், பிரகாஷ் ராஜ் உட்பட பல நடிகர்கள் நடித்துள்ளார்கள். இந்த படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பாராட்டுகளை குவித்து வருகிறது. பழங்குடியின மக்களின் வாழ்க்கை குறித்தும், உண்மையாலுமே அவர்களுக்கு நடந்த அநீதியை குறித்தும் சொல்லும் கதையாக ஜெய்பீம் அமைந்துள்ளது.

- Advertisement -

மேலும், பழங்குடியினர் பெண்ணுக்காக போராடும் வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் சூர்யா நடித்து இருந்தார். இந்தப் படத்தில் ராஜாக்கண்ணு என்ற கதாபாத்திரத்தில் நடித்த மணிகண்டனும் செங்கேணி என்ற கதாபாத்திரத்தில் நடித்த லிஜோமோல் இருவரும் தவிர பல்வேறு நடிகர்கள் நடித்து இருந்தார்கள். அதில் பலர் இருளர் சமுதாயத்தைச் சார்ந்தவர்கள் தான். அதிலும் குறிப்பாக இந்த படத்தில் இருட்டப்பன், மொசக்குட்டி என்ற இரண்டு கதாபாத்திரத்தில் நடித்த அவர்களும் அதே சமூகத்தை சார்ந்தவர்கள்

இந்த நிலையில் இந்த படத்தில் நடித்த நடிகர்கள் பேட்டி ஒன்றில் பங்கேற்றனர். அப்போது பேசிய இந்த படத்தில் நடித்த இருட்டப்பனிடம், இந்தப் படப்பிடிப்பு நடந்தபோது இந்த விஷயம் எனக்கு கிடைத்தது என்று நீங்கள் பெருமையாக கூறும் விஷயம் என்ன என்று கேட்கப்பட்டதற்கு, நான் இரண்டு வேளை தான் சாப்பிடுவேன். ஆனால் இந்தப் படத்தில் நடித்தபோது மூன்று வேளை நல்லா சாப்பிட்டேன் அந்த அளவிற்கு எங்கள் பிரடச்ஷனில் தினமும் விதவிதமான சாப்பாடுகளை போட்டனர் என்று கூறியுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement